ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் எதிராக 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அதன்பின்னர் இரண்டாவது போட்டியில் ஜப்பான் அணிக்கு எதிராக 2-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று இந்திய அணி இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்திய அணி 15 கோல்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அணி அடுத்து சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. 






இதன்காரணமாக இன்றைய போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி கோல் மழை பொழிய தொடங்கியது. முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 9-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி கால் பாதியிலும் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. இறுதியில் இந்திய அணி 16-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. 


குரூப் பி பிரிவிலிருந்து தென்கொரியா மற்றும் மலேசியா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. இதன்மூலம் ஜப்பான், தென்கொரியா மற்றும் மலேசியா அணிகள் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. 2023ஆம் ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்திய அணி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் அனைத்தும் ஒரு முறை மோதும். அவற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண