கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விஷு மலையாளப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த திருவிழா மக்களின் வாழ்வில் ஒரு புதிய தொடக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் சமம் என்று பொருள், எனவே, இந்த பண்டிகை பகல் மற்றும் இரவுகள் கால அளவில் கிட்டத்தட்ட சமமாக இருக்கும், வசந்த உத்தராயணத்தை கொண்டாடுகிறது. விஷூவின் கொண்டாட்டம் காலையில் முதல் விஷயமாக மங்களகரமான பொருட்களை சேர்த்து வைக்கப்படும் விஷு கனியைப் பார்ப்பதில் இருந்து தொடங்குகிறது. இது புத்தாண்டில் செழிப்பைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.



விஷுக் கனி


விஷுக்கனி என்பது, வெள்ளரி, தேங்காய், அரிசி, பாக்கு, வெற்றிலை, தங்க ஆபரணங்கள், நாணயங்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வைத்து, நடுவில் செப்பு விளக்கு ஏற்றி, ஏற்பாடு செய்யப்படும். இந்த அமைப்பை கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் படத்தின் முன் வைக்கிறார்கள். வாழை சிப்ஸ், கறி, சாதம், ஊறுகாய் மற்றும் வாழை இலையில் பரிமாறப்படும் பிற பொருட்களை உள்ளடக்கிய சத்யா விருந்து இல்லாமல் விஷு கனி கொண்டாட்டம் முழுமையடையாது. அந்த சுவையான கேரள உணவுகளை நாமும் செய்து சாப்பிடலாம்.


தொடர்புடைய செய்திகள்: ABP Nadu Metaverse: 3ஆம் ஆண்டில் நுழையும் ABP நாடுவின் புதிய முயற்சி...செய்தி நுகர்வில் புதிய அனுபவத்தைத் தரும் ABP NADU Metaverse..இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம்..!


விஷு கஞ்சி


விஷு கனி நாளுக்கான பாரம்பரிய காலை உணவான விஷு கஞ்சி அரிசி, தேங்காய் பால் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. கேரளாவின் சில பகுதிகளில், இது பல்வேறு பருப்பு வகைகள், அரிசி மற்றும் உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தியும் செய்யப்படுகிறது. சில சமையல் வகைகள் வெல்லத்தை மூலப்பொருளாகவும் பயன்படுத்துகின்றன.


விஷு கட்டா


மலையாளப் புத்தாண்டின் பாரம்பரியக் கொண்டாட்டத்தின் மற்றொரு உணவுப் பகுதி விஷு கட்டா ஆகும். பொடி செய்யப்பட்ட அரிசி மற்றும் வெல்லம் முக்கிய பொருட்களாக வைத்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு உணவு மிகவும் பிரபலம்.



தோரன்


பாரம்பரிய கேரள சத்யாவின் ஒரு பகுதியான தோரன் என்பது முட்டைக்கோஸ், பழுக்காத பலாப்பழம், பீன்ஸ், பாகற்காய் மற்றும் பலவற்றின் கலவையுடன் தயாரிக்கப்பட்ட உலர்ந்த காய்கறி உணவாகும். இது பொதுவாக சாதம் மற்றும் குழம்புடன் ஒரு பக்க உணவாக உண்ணப்படுகிறது. தோரன் கேரளாவின் வடபகுதியில் உப்பேரி என்றும் அழைக்கப்படுகிறது.


மாம்பழ புளிசேரி


கோடையில் பிரபலமான உணவான மாம்பழ புளிசேரி என்பது பழுத்த மாம்பழம், தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் கேரள குழம்பு ரெசிபி ஆகும். இந்த உணவை அப்படியே ருசித்து சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். மீன் குழம்போடு சேர்த்து சாப்பிட்டால் டக்கர்.


உன்னியப்பம்


அரிசி, வாழைப்பழம், வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து செய்யப்படும் இனிப்பு பணியாரம் போன்ற ஒரு உணவுதான் விஷு ஸ்பெஷல் சிற்றுண்டி.


எல அடா (இலை அடை)


இது ஒரு பிரபலமான வேகவைத்த அரிசி பான்கேக் டிஷ். இலை அடையில் தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்படுகிறது. இலை அடையில் வாழை இலையுடன் வேகவைக்கப்படுவதால் இந்த பெயர் பெற்றது.