இந்திய அளவில் சிறந்து விளங்கும் ஏபிபி செய்தி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தமிழின் முதல் டிஜிட்டல் செய்தி தளமான ஏபிபி நாடு இரண்டு ஆண்டுகள் முடிந்து இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தமிழ் மாநிலம் மட்டுமின்றி நாடு மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் செய்திகளை தக்க நேரத்தில் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை தொண்டாக செய்து வருகிறது. அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் முக்கிய கட்டுரைகள் மற்றும் செய்திகளை வலுவாகவும், தைரியமாக சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளது.
ஏபிபி நாடுவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில், சு.வெங்கடேசன் மதுரை எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், “இந்திய அளவில் சிறந்து விளங்கும் ABP செய்தி நிறுவனத்தின் டிஜிட்டல் தமிழ் செய்தித் தளமான ABP நாடு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாட்டு ஊடக வெளியில் ஜனநாயகத்தின் குரலுக்கு வலிமை சேர்க்கும் abpnadu செய்திப் பயணம் சிறப்புற வாழ்த்துகள்.” என்று தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஏபிபி நாடுவிற்கு வாழ்த்து:
நூறு வருட பாரம்பரியமிக்க செய்தி நிறுவனமான ABP குழுமத்தின் ஓர் அங்கமான abpnadu தமிழ்நாட்டில் கால் பதித்து 2 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று (ஏப்ரல்-15) 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செய்தி பெரும் மகிழ்ச்சியளிக்கிறது தொடர்ந்து தமிழர்களின் குரலாக ஓங்கி ஒளிக்க வாழ்த்துகள்.