Viral Video: த்ரீ இடியட்ஸ் ஒன் லீடர்.. இணையத்தைக் கலக்கும் ஆந்தைகளின் ஜாலி வீடியோ..!

Viral Video:இணையத்தில் சுவாரஸ்யமான வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்டாவது வழக்கமாக இருகிறது. அவ்வகையில் தற்போது மூன்று ஆந்தைகள் மியூசிக்குக்கு தகுந்த படி ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Continues below advertisement

இணையத்தில் சுவாரஸ்யமான வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்டாவது வழக்கமாக இருகிறது. அவ்வகையில் தற்போது மூன்று ஆந்தைகள் மியூசிக்குக்கு தகுந்த படி ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் நாய் மற்றும் பூனைகள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது. இதற்கடுத்து கிளி, முயல்,  புறாக்களும் வளர்க்கப்படுகிறது. குதிரை, யானை  போன்ற விலங்குகள் செல்லப்பிராணியாகவும் வியாபார நோக்கிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஆந்தை, பாம்பு  போன்ற கொஞ்சம் வித்தியாசமான மற்றும் ஆச்சர்யமான விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கொஞ்சம் முரடான விலங்குகளை எப்படி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்க்க முடிகிறது என்பது தான். வளர்ப்பது மட்டுமில்லாமல் சுவாரஸ்யமான வீடியோக்களை எடுக்கும் அளவிற்கு அவை எப்படி ஒத்துழைப்பு வழங்குகிறது என்பதும் ஆச்சரியம் தான்.

  தற்போது டிவிட்டரில் மிகவும் வேகமாக வைரலாகி வரும் வீடியோக்களில் ஒன்று, வெளிநாட்டுப் பெண் ஒருவர் தான் வளர்க்கும் மூன்று ஆந்தைகளை மியூசிக்குக்கு ஏற்றபடி நடனமாட வைப்பது தான். மூன்று ஆந்தைகளில் இரண்டு ஆந்தைகள் செம க்யூட்டாக நடனமாடுகிறது. ஒரு ஆந்தை மட்டும் ’படுத்தே விட்டானய்யா’ ஸ்டைலில் என்ன நடக்குது இங்க,  என்னைய வெச்சு காமெடி கீமடி பன்னலயே என்பதைப் போல் பார்த்துக் கொண்டு இருக்கிறது.  இந்த மூன்று ஆந்தைகளும் அவரின் பாஸும் இசைக்கு ஏற்றவாறு நடனமாடுவது டிவிட்டரில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும், இந்த டிவிட்டருக்கு பலரும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். 'பைட்டிங்கிபைடன்’ எனும் டிவிட்டர் பக்கம், இப்படியான பல சுவாரஸ்யமான வீடியோக்களை உலகம் முழுவதும் இருந்து கலெக்ட் செய்து தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகினர். இந்த டிவிட்டர் பக்கம்  2019ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு இதுவரை  1.1 மில்லியன் ஃபாளோவர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் இப்படியான செல்லப்பிராணிகளின் அட்ராசிட்டீஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பினை பெற்றுவருகின்றது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola