வொர்க் அவுட்டுக்கு முன்பு உப்பு - என்ன மாயமெல்லாம் செய்யும் தெரியுமா?

உடற்பயிற்சிக்கு முன்பு உப்பு எடுத்துக்கொள்வது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Continues below advertisement

ஒரு ஆரோக்கியமான மற்றும் வெற்றிகரமான எடை குறைப்புக்கான பயணம் ஒரு சீரான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. அதிகப்படியான கொழுப்பை கரைக்கவும், செயல்முறையை விரைவுபடுத்தும் உணவுகளை சாப்பிடவும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டியுள்ளது . உங்கள் வொர்க்அவுட்டிற்கு முன்னும் பின்னும் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியமானது. சில உணவுகள் அதற்கு முன் உட்கொண்டால், நல்ல உடற்பயிற்சியை பெற உதவும். புரதம் நிறைந்த உணவுகள், வாழைப்பழங்கள், கொட்டைகள் மற்றும் பிற உணவுகள் ஓடுவதற்கு அல்லது ஜிம்மிற்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால் எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.அது போல உடற்பயிற்சிக்கு முன்பு உப்பு எடுத்துக்கொள்வது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Continues below advertisement

1.உடலில் நீர்ச்சத்தை மேம்படுத்துகிறது: உப்பு தண்ணீரைத் தக்கவைக்க உதவுகிறது, எனவே கடுமையான உடற்பயிற்சியின் போது உங்களுக்கு நீரிழப்பு ஏற்படாது. 

2. இதயத் துடிப்பைக் குறைக்கிறது: உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் உப்பு இருப்பதால், அது உங்கள் உடற்பயிற்சியின் போது இதயத் துடிப்பை எளிதாக்குகிறது.

3. தசைப்பிடிப்புகளைத் தடுக்கிறது: மீண்டும், மேம்பட்ட இரத்த ஓட்டம் காரணமாக, உடற்பயிற்சியின் போதும் அதற்குப் பின்னரும் தசைப்பிடிப்பு மற்றும் மூட்டு வலிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். 

4. பவர் அவுட்புட்டை அதிகரிக்கிறது: உடலில் உள்ள ஆற்றல் இருப்புக்களை எளிதில் அணுகுவதற்கு உப்பு உதவுகிறது, இது ஆற்றல் நிரம்பிய வொர்க்அவுட்டின் போது தேவைப்படுகிறது.

 5. இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மாற்றுகிறது: உப்பின் நுகர்வு காரணமாக நீர் தக்கவைப்பு அதிகரிப்பதால் இழந்த எலக்ட்ரோலைட்களை உடல் மாற்ற உதவுகிறது. 

6. முக்கிய உடல் வெப்பநிலையை குறைக்கிறது: உடலில் நீர் தேங்குதல் மற்றும் மேம்பட்ட இரத்த ஓட்டம் காரணமாக இது நிகழ்கிறது. அந்த வியர்வைக்கு மத்தியில் உகந்த உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவியாக இருக்கிறது 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola