குரங்குகள் ஒரு சமூக உயிரினம் . மனித வாழ்க்கையின் அடிப்படை விலங்காக குரங்குகளைத்தான் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குரங்குகள் மனிதர்களை போல கூட்டம் கூட்டமாக வாழும் உயிரினம் . குழந்தைகளை நாம் எப்படி அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்கிறோமோ அதை போலத்தான் குரங்குகளும். குரங்குகள் தனது குட்டி இறந்தாலும் கூட தன்னுடனேயே சுமந்து செல்லும் . அது போன்ற எத்தனையோ நெகிழ்ச்சியான வீடியோக்களை  நாம் இணையத்தில் பார்த்திருக்கிறோம். 


”ஐ மிஸ் யூ அம்மா” :


அந்த வகையில் தாயை பிரிந்த குட்டி குரங்கு ஒன்றினை மீட்ட வனவிலங்கு ஆர்வலர்கள் மீண்டும் குட்டியினை அதன்  தாய் மற்றும்  குடும்பத்துடன் சேர்த்தனர். பெட்டியை திறந்ததும் குறங்கு ஓடிச்சென்று தனது தாயை கட்டிப்பிடித்த காட்சிகள் அத்தனை உணர்வு பூர்வமானது. 


வீடியோ:






வெள்ளிக்கிழமை பகிரப்பட்ட இந்த வீடியோ  655,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 47,000 க்கும் மேற்பட்ட  லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.


காயத்துக்கு மருந்து போடுங்க டாக்டர்.. ப்ளீஸ்!


முன்னதாக இதே போல குரங்கு ஒன்று தலையில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.  பீகார் மாநிலம் சாசரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற குரங்கு தனக்கு அடிப்பட்ட காயத்தினை மருத்துவரிடம் காட்டியது. டாக்டர் எஸ் எம் அகமது அந்த குரங்கின் காயத்தினை பரிசோதித்து  ஊசி மற்றும் ஆயிண்மெண்ட்  ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளித்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் , குரங்கு ஒரு மனிதனை போலவே சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததுதான். மருத்துவர் பரிசோதிக்கும் பொழுது  காயம் பட்ட இடத்தை காட்டியது. அதன் பிறகு நோயாளியின் படுக்கையில் படுத்துக்கொண்டு ஊசி போடுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்ததுதான் ஹைலைட். 


வீடியோ :






குரங்குகள் வித்தியாசமானவை :


குரங்குகள் மனிதனைப் போன்ற நடத்தையை வெளிப்படுத்தும் என்பது நாம் அறிந்ததுதான். பாலூட்டி விலங்குகளிலேயே மிகப்பெரிய மற்றும் வேறுபட்ட கூட்டம்தான் குரங்குகள் கூட்டம். லைவ் சயின்ஸ் படி, பல்வேறு வகையான குரங்குகள் உலகம் முழுவதும் உள்ளன. அவை  மிகவும் மாறுபட்ட வாழ்க்கை முறைகளுடன்  பல வடிவங்கள், அளவுகள் மற்றும் வண்ணங்களில் இருக்கின்றன.