பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வனிதா விஜய குமார் நிறையவே எடை  குறைந்து இப்போது மிகவும் ஒல்லியாக தெரிகிறார். இந்த மாற்றத்திற்கான ரகசியத்தை நம்முடன்  பகிர்ந்து  கொள்கிறார் வனிதா. 


தனது யூ டியூபில் நிறைய ரெசிபிக்களை பதிவிடும் அவர், இப்போ எடை குறைத்த பின், நிறைந்த உடல் எடை குறைப்பதற்காக ரெசிபிக்களை பகிர்ந்து கொள்கிறார்.  வீடியோவில் அவர் குறிப்பிட்டு இருப்பது என்ன வென்றால், நான்  அதிக அளவுக்கு டயட் அல்லது உடற்பயிற்சி அதையெல்லாம் செய்ய வில்லை. அன்றாடம் செய்யும் வேளைகளில் சிறிய மாற்றங்கள் கொண்டு வந்தேன். அதனால் தான் இவ்வளவு எடை குறைந்து இருக்கிறது என பகிர்ந்து கொள்கிறார்.


 



 உணவில் காலை முதல் இரவு   வரை எடுத்து கொள்வதில், சில மாற்றங்களை கொண்டு வந்தேன். அரிசி உணவுகளை தவிர்த்து, சிறுதானிய உணவுகளை எடுத்து கொண்டேன். இனிப்புகளை தவிர்த்து, இயற்கையாக பழங்களில் இருக்கும்  இனிப்பை மட்டும் எடுத்து வந்தேன். எப்போதும் சாப்பிடும், மீன்  குழம்பு, மட்டன், சிக்கன், சாம்பார் ஆகிய வற்றுடன், அரிசிக்கு பதில், சிறுதானிய தினை, சாமை, குதிரைவாலி, வரகு ஆகியவற்றை எடுத்து கொண்டேன். உங்களுக்காக சில ரெசிபிக்களை லைவ் வீடியோவில் பகிர்ந்து கொண்டு உள்ளார்.


இந்த  கொரோனா காலகட்டத்தில் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம்னு அனைவரும் உணர்ந்து .இருப்போம். அதுனால கொரோனா சமயத்துல டயட் ல இருந்து நான் எடை குறைக்கும்னு முடிவு பண்ணி எடையை குறைச்சேன். இது  மட்டுமில்லாமல், உடல் எடை அதிகமாவதற்கான காரணங்கள் என்ன? காரணத்தை எப்படி கண்டுபிடிக்கிறது ? இப்படி பல்வேறு தகவல்களை அவர் வீடியோவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.




இவர் வீடியோவில் இருந்து எளிமையாக சாமை தயிர்  சாதம், எப்படி செய்வது என ரெசிபி  பற்றி தெரிந்து கொள்ளலாம்.  1 கப் சாமை மில்லட்டுக்கு 2 கப் தண்ணீர் எடுத்து கொள்ள  வேண்டும். சாமை அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அதனோடு ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து குக்கரில் வைத்து வேக வைத்து கொள்ளவும் பின்னர் அதை எடுத்து ஆற வைத்து கொள்ளவும். தயிர் சாதம் செய்யும் போது , எப்போதும் சூடாக செய்ய கூடாது.  இதற்கு இடையே  சிறிய கடாயில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்துக்கொள்ளவும். பின்னர் சாமை சாதத்துடன் தயிர், சிறிதளவு பால், உப்பு, தேவைப்பட்டால் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் தாளித்த வெங்காயம் அனைத்தையும் சேர்த்து கொள்ளலாம். இப்போது மில்லெட் சாமை தயிர் சாதம்  தயார்.