தற்போதைய கொரோனா பெருந்தொற்று சூழலைக் கருத்தில்கொண்டு, JEE - மே மாத (மெயின்) தேர்வு-2021 எழுதுவதற்கான விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி, மே மாத தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள் இன்று (15 July 2021) மாலை 9 மணிவரையிலும் கட்டணம் செலுத்துவது இரவு 11.50 வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, ஏற்கனவே சமர்பித்த விண்ணப்பங்களில்  திருத்தங்களை மேற்கொள்ளலாம். வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது என்பதால் விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தற்போது,வரை நான்காம் கட்ட தேர்வுக்கு, சுமார் 6.09 லட்சம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேவையான கட்டணங்களை, கடன் அட்டை /சேமிப்பு கணக்கு அட்டை / இணையதள வங்கிச் சேவை/ யுபிஐ பேடிஎம் (Credit/Debit Card/ Net Banking/UPI and PAYTM) மூலமாக செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் இருந்து மேலும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.


விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், 011-40759000  என்று தொலைபேசி எண்ணிலும், jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.   


மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில், பிப்ரவரி மாதம் தொடங்கி நான்கு முறைகள் (மார்ச், ஏப்ரல், மே) JEE தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது. மேலும், மொத்தம் கேட்கப்படும் 90  கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்தது. மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


இந்தாண்டு, பிப்ரவரி, மார்ச் மாத தேர்வுகள் நடைபெற்ற நிலையில், மே, ஏப்ரல் மாதத்துக்கான தேர்வுகள் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மே, ஏப்ரல் மாதத்துக்கான ஜேஇஇ மெயின் புது தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது. அதன்படி, மூன்றாம் கட்ட தேர்வுகள் ஜூலை 20 முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்றும், மே மாதத்துக்கான நான்காம் கட்ட தேர்வுகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே, JEE மெயின் 2021 தேர்வு எழுத நினைக்கும் விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளைக் கருத்தில்கொண்டு மூன்றாம் கட்ட தேர்வு தேதியை மாற்றியமைக்க என்டிஏ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கல்வித்துறை வட்டாரங்கள் கூற்றுப்படி, ஜூலை 20, 22, 25, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 


கட்டாயம் வாசிக்க: 


அதிகரித்துள்ள டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகள்: அரசுப்பள்ளி மாணவர்களின் நீட் எதிர்காலம் என்ன? 


Neet | நீட் தேர்வுக்கு அப்ளை பண்ணனுமா? இதுதான் செக்லிஸ்ட்.. இதெல்லாம் ரெடியா வச்சுக்கோங்க..