வெறுப்பும் கோபமும் நெருப்பு போன்றது அது நம்மைத்தான் அழிக்குமே தவிர மற்றவர்களை ஒன்றும் செய்யாது. கோபத்தில் எடுக்கும் முடிவுகள் நிச்சயமாக சரியானதாக இருக்க இயலாது. கோபம் நம்மை பின்னோக்கியே இழுத்துச் செல்லும். கோபத்தால் எந்த காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இருந்தாலும் நாம் கோபம் கொள்கிறோம். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறோம். கோபம் உண்மையிலேயே ஒரு மனிதனின் மிகப்பெரிய சாபம் எனலாம்.
கோபத்தைக் கட்டுப்படுத்த தியானம், யோகம் எனப் பல்வேறு பயிற்சிகளும் இருக்கின்றன. இருப்பினும் கோபத்தைக் குறைக்க வாஸ்து சாஸ்திரமும் தம் பங்குக்கு பல டிப்ஸ் தருகின்றன. ஆன்மீக, சைக்கிக் ஹீலரான டாக்டர் மது கோட்டியா வாஸ்து சாஸ்திரத்தின்படி சில டிப்ஸ் தருகிறார்.
கோபத்தைக் குறைக்க வாஸ்து டிப்ஸ் அவரது கூற்றுப்படி:
1. கோபத்தைக் குறைக்க வீட்டில் எப்போது நல்ல சுகந்தமான சூழல் இருப்பதை உறுதி செய்யுங்கள். இது மனதிற்கு அமைதி தரும். மனதில் நேர்மறை சிந்தனை உருவாகும். இதனால் கோபம் குறையும். இதற்காக வீட்டில் நல்ல மனம் வீசும் மலர்களை வைக்கலாம்.
2. வீட்டில் சிவப்பு கலர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கோபத்தை அதிகரிக்கும். வீட்டின் சுவர், போர்வை, மெத்தை விரிப்பு, சோஃபா குஷன் கவர், திரைச்சீலைகள் என எதுவுமே சிவப்பு நிறத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிவப்பு நிறம் கோபத்தை தூண்டக் கூடியது. மாறாக ஊதா அல்லது வெளிர் பச்சை நிறம் பயன்படுத்துங்கள். போர்வைகளுக்கு பேஸ்டில் கலர்கள் பயன்படுத்தலாம்.
3. சூரிய பகவானுக்கு தினமும் தண்ணீர் படையுங்கள். இது உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தும்.
4. உங்கள் வீடுகளில் வீட்டு உபயோக பொருட்களை வைக்கும் திசைகளைக் கவனியுங்கள். வீட்டை அடைத்து பொருட்களை வைக்காதீர்கள். பொருட்களை ஓரமாக வைத்து நிறைய வெற்றிடம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
5. அதிகமாக கோபப்படுபவர்கள் தினமும் கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வருவது நலம் தரும்.
6. வீட்டில் ஆங்காங்கே கண்ணாடி வையுங்கள். இது உங்கள் கோபத்தைக் குறைக்கும். ஏனெனில் கண்ணாடியில் நம் தோற்றத்தை நாம் பார்க்கும் போது நம் உண்மை நிறம் நமக்குத் தெரியவரும்.
7. உங்கள் படுக்கையின் அருகே ஒரு குவார்ட்ஸ் கிறிஸ்டல் வைக்கலாம். அது கோபத்தை தணிக்க வல்லது. வீட்டில் ஒரு நல்ல நேர்மறை அதிர்வலைகளைக் கடத்தும். மனதில் தெளிவை ஏற்படுத்தும்.
8. பல நேரங்களில் சோர்வு மற்றும் தூக்கமின்மையால் கோபம் ஏற்படலாம். அதனால் தூக்கத்தை சீராக கடைபிடியுங்கள்.
9. உங்களுக்கு யார் மீதாவது கோபம் வந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கான நேரத்தைக் கொடுங்கள். அது கோபத்திலிருந்து உங்களை விடுவிக்கும்.
10. நல்ல இனிமையான இசையைக் கேளுங்கள். அது கோபத்தை தடுக்கக் கூடியது. இசை ஒரு வகை தெரபி தான்.
11. வீட்டில் நறுமனம் வீசும் மலர்கள், ஊதுவத்திகள் ஏற்றுங்கள். ஆனால் ஊதுவத்தி புகையைக் கக்குவதாக இல்லாமல் மனம் வீசுவதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.