தெலுங்கு காலண்டரின்படி, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ’யுகாதி’(Ugadi) எனப்படும் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஏப்ரல் 2-ம் தேதி (சனிக்கிழமை) தெலுங்கு புத்தாண்டு(Telugu New Year) கொண்டாடப்படுகிறது.


பொதுவாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே நாள் மகாராஷ்டிராவில் ’குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. மேலும், வட இந்திய மாநிலங்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கமாகவும் இப்பண்டிகை நாள் குறிக்கப்படுகிறது. 


யுகாதி சிறப்பு:


புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடப்படும் யுகாதி அன்று தொடங்கப்படும் புது காரியங்கள் வெற்றியடையும் என நம்பப்படுகிறது. இந்த விடுமுறை நாளன்று உறவினர்கள், நண்பர்களோடு நேரத்தை செலவிட்டு, இனிப்பு, பலகாரங்கள் பகிர்ந்து மகிழ்ச்சியாய் புத்தாண்டை கொண்டாட திட்டமிடலாம்.


யுகாதி: கொண்டாப்படும் நேரம்:


ஏப்ரல் 1-ம் தேதி இரவு 11.53 மணிக்கு தொடங்கும் தெலுங்கு வருடப்பிறப்பு ஏப்ரல் 2-ம் தேதி இரவு 11.58 மணி வரை கொண்டாப்படுகிறது.


யுகாதி அன்று செய்யப்படும் பிரசாதம்:


வேப்பிலை, உப்பு, மாங்காய், புளி, இனிப்பு சேர்த்து செய்யப்படும் பிரசாதம் செய்யப்படுகிறது.


யுகாதி அன்று செய்ய வேண்டியவை:


பண்டிகை அன்று காலை எண்ணெய் தேய்த்து குளியல் செய்தபிறகு பூஜை மேற்கொள்ளலாம். வேப்ப இலையால் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பின்பு, மற்ற இனிப்பு பலகாரங்களை அனைவரும் பகிர்ந்து தரலாம். புத்தாண்டை முன்னிட்டு, சிலர் தங்கள் வீட்டிற்கு வெள்ளை பெயின்ட் பூசுவார்கள். மேலும், வீட்டு வாயிலில் ரங்கோலி வரையப்படும். வீட்டைச் சுற்றி அலங்கரிக்க மா இலைகள் பயன்படுத்தப்படும்.


இந்த ஆண்டு முழுவதும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்க அனைவருக்கும் தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்!




பிற முக்கியச் செய்திகள்:










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண