சமூக வலைதளங்களில் எப்போதும் சாலை விபத்துகள் தொடர்பான வீடியோக்களை நம்மை மிகவும் பதட்டம் அடைய செய்யும். இந்த வீடியோவை பலரிடம் சென்று வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு சாலை விபத்து வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. 


உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் முதியவர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே வெளியே அமர சென்றுள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று அவரை இடித்து கீழே தள்ளிவிட்டு செல்கிறது. இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த முதியவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி தனக்கும் தன்னுடைய வீட்டிற்கு அருகே வசிப்பவர்களுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக அவர்கள் இதை வேண்டுமென்றே செய்திருக்காலம் என்று அந்த முதியவர் புகார் அளித்துள்ளார். 


 






முன்னதாக நேற்று சாலையில் நடந்து செல்பவரின் மீது SUV ஜீப் ஒன்று அசால்டாக ஏறி செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் டெல்லியில் நடந்ததாக கூறப்படுகிறது. டெல்லியின் ஜான்பாத் பகுதியில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. பிஸியான சாலையில் சில கார்கள் வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. அப்போது வெறும் சாலைதானே என ஒருவர் வேகமாக சாலையைக் கடக்கிறார். அப்போது சாலையின் நடுவே சென்றுகொண்டிருந்த சிவப்பு நிற SUV தார் ஜீப் ஒன்று சடாரென திரும்பி சாலையில் ஓரத்தில் சென்றுகொண்டிருக்கும் நபர் மீது ஏறி இறங்கி செல்கிறது. 


 






விபத்து நடந்தும் கார் ஓட்டுநர் ஜீப்பை நிறுத்தவோ, அடிபட்டவரை சென்று பார்க்கவோ இல்லை. அந்த சிவப்பு நிற கார் நிறுகாமலேயே செல்கிறது. இந்த கோர விபத்து அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அங்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் யாருடையது? காரை ஓட்டியவர் யார்? இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் எல்லாம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. 




மேலும் படிக்க:தட்டினால் போதும்.. பணம் செலுத்த Google Pay-இன் புதிய ஆப்ஷன் வந்தாச்சு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண