புற்றுநோய் என்பது உயிரணுக்களின் வளர்ச்சியில் ஏற்படும் மரபணு பிறழ்வு காரணமாக கட்டிகள் உருவாகிறது. மார்பக புற்றுநோய் பல்வேறு காரணங்களால் வருகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். இதில் மூன்று வகைகள் உள்ளது. அதில் இரண்டு வகை மிகவும் அரிதாகவே பாதிக்க கூடியது. ஒரு வகை மட்டும் அதிகமாக பரவுகிறது.




இன்வேசிவ் டக்டல் புற்றுநோய் (Invasive ductal carcinoma)- இந்த வகை புற்றுநோய் பால் குழாய்களில் ( milk duct ) ஏற்படுகிறது. புற்றுநோய் செல்கள் இந்த குழாய்களில் வளர்கிறது. எங்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் 70% இந்த வகை புற்றுநோய் தான் வருகிறது.


அழற்சி புற்றுநோய் (Inflammatory carcinoma) - இது மிகவும் அரிதான புற்றுநோய் வகை ஆகும். மார்பக புற்றுநோயில் மிக அரிதாக 1%மட்டுமே இந்த வகை புற்றுநோய் பரவுகிறது. இது ஒவ்வாமை காரணமாக வருகிறது. இந்த புற்றுநோயில் மார்பகத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறது.


பேஜெட் நோய் (Paget’s disease) - இந்த வகை புற்றுநோய் 1%மட்டுமே பரவும்தன்மை கொண்டது. இந்த புற்றுநோயின், முலை காம்புகளை சுற்றி இரத்தம் சேர்த்து கருப்பாக மாறி இருக்கும். இது மிகவும் குறைவான சதவீதம் மட்டுமே பரவ கூடியது.


இத்தனை வகைகளாக இருக்கும் புற்றுநோய், படிநிலைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு படிநிலைக்கு தகுந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறது. படிநிலைகள் 1 முதல் 3 வரை வரிசை படுத்த படுகிறது. ஆரம்ப நிலை முதல் தீவிர நிலை என எடுத்துக்கொள்ளலாம்.




படி நிலை 1 - இது ஆரம்ப நிலை புற்று நோய் ஆகும். புற்றுநோய் கட்டி ஒன்று உருவாகிய இருக்கும். நிணநீர் முடிச்சுகளில் தொடங்கி இருக்கும். ஆனால் நிணநீர் மண்டலங்களுக்கு இது பரவ வில்லை. நிணநீர் முனையில் சிறு கட்டியாக தொடங்கி இருக்கிறது.


படி நிலை 2 - புற்று நோய் கட்டிகள் அருகில் இருக்கும் நிணநீர் மண்டலங்களுக்கு பரவி இருக்கும். புதிய கட்டிகள் உருவாகி பரவ ஆரம்பிக்கும்.


படி நிலை 3 - இந்த நிலையில் புற்றுநோய் கட்டிகள் பெரியதாக இருக்கும். அருகில் இருக்கும் திசுக்ககளுக்கு பரவ ஆரம்பித்து இருக்கும். திசுக்களில் புற்று நோய் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.


                                                         

                   


படிநிலை 4 - இந்த நிலையில் புற்றுநோய் கட்டிகள் மார்பகத்திற்கு பரவ ஆரம்பித்து இருக்கும். உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்து இருக்கும்.


புற்றுநோய் சிகிச்சை ஒவ்வொரு படிநிலை மற்றும் நோயாளியின் நிலை சார்ந்து சிகிச்சை அளிக்க படுகிறது.


அடுத்த கட்டுரையில் மார்பக புற்று நோய் சிகிச்சைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.