உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது ஊட்டச்சத்து. பல வகையான விட்டமின்களும் நம் உடலுக்கு தேவையானது. ஒவ்வொரு விட்டமின்களும் நம் உடல் உறுப்புகளுக்கு ஒருவிதமான சக்தியை கொடுக்கிறது. அதனால்தான் சத்தான சரிவிகித உணவு முறை ஆரோக்கியத்துக்கு தேவை. அனைத்து விட்டமின்களும் அவசியம் என்றாலும் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது விட்டமின் சி. விட்டமின் சி ஐ ‘தி கோல்டன் விட்டமின்’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த விட்டமின் சி, பழங்கள், காய்கறிகள், கீரைகள், கடல் உணவுகளில் அதிகம் கிடைக்கிறது.


விட்டமின் சி நன்மைகள்:
திசு வளர்ச்சி, உடல் வளர்ச்சி, எலும்புகள் வலிமை, பற்கள் வலிமை போன்ற முக்கிய உடல் வளர்ச்சிக்கு விட்டமின் சி உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி, தேவையற்ற கழிவுகளை உடலில் இருந்து நீக்க உதவுகிறது.  கொரோனா போன்ற வைரஸ் நோய்களையும், பாக்டீரியாவால் உண்டாகும் நோய்களையும் விட்டமின் சி தடுக்கிறது. உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியம் மட்டுமின்றி, தோல் ஆரோக்கியம் போன்ற தேக ஆரோக்கியத்துக்கும் விட்டமின் சி உதவுகிறது. இவ்வளவு ஆரோக்கியமான விட்டமினை நாம் எந்தெந்த பழங்கள் மூலம் அதிகம் பெறலாம்.. பார்ப்போம்.


ஆரஞ்சு:




யாராவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்களை பார்க்கச் செல்பவர்கள் பழங்கள் வாங்கிச் செல்வது வழக்கம். அதில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் ஒரு பழம்தான் ஆரஞ்சு. காரணம், ஆரஞ்சின் ஊட்டச்சத்து. சுவை, ஜூசாக நீர்ச்சத்து, பழம் என  அனைத்திலும் ஆரஞ்சு வேற லெவல். ஒரு மீடியம் சைஸ் ஆரஞ்சு பழத்தில் 120மிகி விட்டமின் சி உள்ளது. தினமும் ஒரு பழத்தை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. பழமாக மட்டுமல்ல, ஜூஸாகவும் ஆரஞ்சு சாறு குடிக்கலாம். 


ஸ்டாபெர்ரிஸ்:




விட்டமின் சி அதிகம் உள்ள ஒரு பழம் ஸ்டாபெர்ரி. ஸ்டாபெரியை உங்களது எல்லா டயட் ப்ளானிலும் சேர்த்துக்கொள்ளலாம். காலை, மாலை என்ற எந்த வேளையிலும் ஸ்டாபெர்ரியை உண்ணலாம். ஸ்டாபெர்ரி மூலம் செய்யப்பட்டும் சிற்றுண்டிகள் பல உள்ளன. அவற்றை தேடிப்பிடித்து செய்து ருசிக்கலாம். ஒரு கப் ஸ்டாபெர்ரியில் 90மிகி அளவுக்கு விட்டமின் சி உள்ளது.


தக்காளி:




தக்காளி இல்லாத கிச்சனே இல்லை. இல்லாமலும் இருக்கக் கூடாது. தினம் தினம் மூன்று வேளையும் அனைத்து சமையலிலும் நிச்சயம் தக்காளி ஏதோ ஒரு பங்கெடுக்கும். பங்கெடுக்க வேண்டும். விட்டமின் சி மட்டுமின்றி விட்டமின் ஏவும் தக்காளியில் அதிகம். இதயத்துக்கு மிக நல்லது தக்காளி. தக்காளியை உணவுப்பொருட்களில் சேர்ப்பது மட்டுமின்றி சூப்பாகவும் வைத்து குடிக்கலாம்.


எலுமிச்சை:




ஒரு மீடியமான எலுமிச்சையில் 83மிகி விட்டமின் சி உள்ளது. எளிதாக கிடைக்கும் எலுமிச்சையில் ஒருநாளைக்கு தேவையான விட்டமின் கிடைப்பது சிறப்பானதுதானே. எலுமிச்சை டீ, எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை தினமும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு  நல்லது.


குடை மிளகாய்:




கேம்சிகம் என்று சொல்லப்படும் குடை மிளகாயில் விட்டமின் சி அதிகம். இதில் பொட்டாசியமும் அதிகளவு கிடைக்கும். உங்களது சமையலில் குடை மிளகாயை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.


உடல் ஆரோக்கியத்துக்கும், தோல் புத்துணர்ச்சிக்கும்.. முக்கியமான 3 ஜூஸ் !