உடல் ஆரோக்கியத்தை அவர்களின் தோலைக் கொண்டே சொல்லிவிடலாம். ஆரோக்கியம் நிறங்களில்  இல்லை, ஆனால் தோலின் புத்துணர்ச்சியில் இருக்கிறது. சரியான சத்துகளை எடுத்துக்கொள்ளும் ஒரு ஆரோக்கியமான உடலின் தோலானது புத்துணர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.


தோலின் புத்துணர்ச்சிதான் உடலின் புத்துணர்ச்சி. வயதாக வயதாக நம் தோலின் புத்துணர்ச்சி குறைகிறது. சிலருக்கு சத்துகள் குறைவாகவும் இளம் வயதிலேயே அளவுக்கு அதிகமாக தோல் சோர்வடைந்து இருக்கும். இதனைத் தடுப்பதை நம் ஆன்டி ஏஜிங் என்கிறோம். சத்தான உணவை உட்கொள்வது மூலம், பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது மூலமும் தேவையான ஊட்டச்சத்தை நாம் பெற முடியும். நம் தோலுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய முக்கிய மூன்று ஜூஸ் பற்றி தெரிந்துகொள்வோம்.


1.கேரட்டும் எலுமிச்சையும்..




ஊட்டச்சத்து அதிகம் கொண்ட ஒரு காய்கறி தான் கேரட். உடல் ஆரோக்கியத்தும், கண் பார்வை, தோல் புத்துணர்ச்சி ஆகியவற்றுக்கு கேரட் மிகச்சிறந்த ஒன்று.  கேரட்டில் உள்ள ஊட்டச்சத்து ஏ தோலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து பளபளவென வைத்திருக்கிறது. 


கேரட்டை நன்கு அரைத்து அதை தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். அதில் சிறிய அளவு ஐஸ் கட்டிகளையும், தேவையான அளவு எலுமிச்சை சாறையும் கலந்து குடிக்கலாம்.


2.மாதுளையும் புதினாவும்:




உடல் ஆரோக்கியத்தில் மாதுளை பழத்தின் பங்கு  மிக அதிகம். உடல்நிலை சரியில்லாமல் யாராவது இருந்தாலும் கூட மாதுளை ஜூஸ் கொடுப்பார்கள். அந்தளவிற்கு மாதுளை உடலுக்கு நல்லது. குறிப்பாக மாதுளை தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு மிக நல்லது. மாதுளையில் உள்ள விட்டமின் சி மற்றும் கே, தோலில் புது செல் உருவாகி தோல் பளபளப்பாக உதவுகிறது. மாதுளையால் தோல் ஆரோக்கியம் பெற்று புத்துணர்ச்சியாகிறது.


ப்ரஷான மாதுளை பழங்களை எடுத்து மிக்ஸியில் அரைத்து ஜூஸ் போட்டுக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் தண்ணீர் சிறிதளவு சேர்த்து அதில் ஐஸ் கட்டிகளையும், சில புதினா இலைகளையும் சேர்த்துக்குடிக்கலாம். சிலர் சிறிதளவு பாலும் சேர்ப்பார்கள். வேண்டுமானால் சேர்க்கலாம்.


3.வெள்ளரிக்காயும், எலுமிச்சையும்..




வெயில்காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த காய் தான் வெள்ளரி. உடலுக்கு குளிச்சி என்பதை தாண்டி நம் உடலின் தோல் ஆரோக்கியத்துக்கு வெள்ளரி மிக முக்கியமான ஊட்டச்சத்தை தருகிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. வெள்ளரியால் தோலில் உள்ள கருப்புள்ளிகள் நீங்குகின்றன.


வெள்ளரியின் தோலை நன்றாக சீவிய பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைக்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீரையும், எலுமிச்சை சாறையும் சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து குளிச்சியாக குடிக்கலாம்.




Lemon Tea | ஒரு கப் லெமன் டீ குடிச்சா.. இவ்வளவு நன்மைகளா?