புற்றுநோய்க்கு முதல் சிகிச்சையாக அறுவை சிகிச்சை மட்டுமே இருந்து வந்துள்ளது. இப்போது நவீன கதிவீச்சு கருவிகள் மூலம் புற்றுநோய் செல்களை அளிப்பதற்கு புதிய முறைகள் கண்டறியப்பட்டுள்ளது. மார்பகத்தில் அளவு, வடிவம், தோலின் நிறம் ஆகியவற்றை கொண்டு மார்பக புற்றுநோய் பரிசோதிக்கப்படும். மேலும் அக்குள் பகுதியில் ஏற்படும் கட்டி, மார்பகத்தில் ஏற்படும் தோலின் நிறம் மாறுதல், மார்பக தோலில் தடிப்பு இருப்பதை சார்ந்து மேமோகிராம், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து கட்டியில் அளவு, தன்மைக்கு ஏற்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கான முதல் நிலை ?
ஒருவருக்கு மார்பக புற்றுநோய் என்பது கண்டறியப்பட்ட நிலையில், அதை பரிசோதித்த மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், பேத்தாலஜிஸ்ட், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர், நியூக்ளியர் மருத்துவர் மற்றும் புற்று நோய்க்கான சிறப்பு வல்லுனர்கள், மருந்து அளிக்கும் மருத்துவர் மற்றும் கதிர்வீச்சு நிபுணர் ஆகியோர் கொண்ட குழு நோயாளியின் உடல் நிலை, மற்றும் புற்றுநோயின் தீவிரம், என்ன வகை புற்று நோய் என்பதை ஆராய்ந்து சிகிச்சைகளை தொடங்குவார்கள்.
அறுவை சிகிச்சை - அனைத்து பெண்களுக்கும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை. புற்றுநோய் கட்டியின் அளவு, பொறுத்து அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். புற்றுநோய் செல்கள், இருக்கும் திசுக்களை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடுவார்கள். புற்று நோய் செல்கள் மற்ற திசுக்களுக்கு பரவி இருந்தால் கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிப்பார்கள். மார்பக புற்றுநோய் வந்தாலே மார்பகத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கதிர்வீச்சு சிகிச்சை - நவீன கதிர்வீச்சு சிகிச்சையின் மூலம் மார்பக புற்றுநோய் செல்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். துல்லியமான மற்றும் பாதுகாப்பான லீனியர் ஆக்சிலேட்டர் என்ற கருவி கதிவீச்சு சிகிச்சையில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இது புற்றுநோய் கட்டிகள் மீது முழுவதுமாக செயல் புரிந்து செல்களை அளிக்கிறது.
இந்த நவீன கருவியால் மார்பக புற்றுநோய் பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடிகிறது. புற்றுநோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
சிகிச்சைக்கு பிறகு மீண்டும் புற்றுநோய் தோன்றினால் என்ன செய்வது ?
இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் சிகிச்சை எடுத்து கொண்ட 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புற்றுநோய் வராமல் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இன்றைய கீமோதெரபி சிகிச்சை மற்றும் புற்றுநோய் செல்களை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தரும் மருந்துகள் காரணத்தால் மீண்டும் புற்றுநோய் வராமல் தடுக்க முடிகிறது.
மார்பக புற்றுநோய் பற்றிய கட்டுக்கதைகளை அடுத்த கட்டுரையில் பாப்போம்