5 நிமிடங்களில் செய்யும் தீபாவளி ரெசிபி வகைகளை பார்க்கலாம்

 

இன்று பெரும்பாலான பலகாரங்கள் கடைகளில், வாங்கி பண்டிகை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். பாரம்பரியமாக வீட்டில் செய்த உணவுகளை சாப்பிடுவது குறைந்து  வருகிறது. சில உணவுகள் குறைவான நேரத்தில் செய்து முடிக்க முடியும். மேலும் இவை ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.

திணை தேன் லட்டு

தேவையான பொருள்கள்

திணை மாவு - 100 கிராம்

ரவா - 100 கிராம்

நெய் - 100 கிராம்

சர்க்கரை - 100 கிராம் ( பொடித்தது )

பாதாம் மற்றும் முந்திரி பருப்பு - தேவையான அளவு

தேன்- 100 கிராம்

ஏலக்காய் – சிறிதளவு

செய்முறை

  • திணை அரிசி வாங்கி அதை வாணலியில் லேசாக வறுத்து, நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • ரவாவையும் லேசாக வறுத்து கொள்ளவும். நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த திணை மாவு, ரவா, மற்றும் ஏலக்காய் தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • சர்க்கரையும் இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • முந்திரி மற்றும் பாதாம் பருப்பை, நெய்யில் வறுத்து கொள்ளவும்.
  • பின் நெய்யை லேசாக சூடு செய்து மாவுடன் சேர்க்கவும். தேவையான அளவு தேன் சேர்த்து வறுத்த முந்திரி மற்றும் பாதாம் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

சுவையான ஊட்டச்சத்து மிக்க திணை தேன் லட்டு தயார்.

சிமிலி உருண்டை - புரத சத்து மிக்கது.

தேவையான பொருள்கள்

எள் - 1/4 கப்

ராகி மாவு - 1 கப்

வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்

வெல்லம் - 1 கப்

செய்முறை

  • எள் தனியாக எடுத்து தண்ணீரில் 2முதல் 3 முறை நன்றாக கழுவி, ஒரு காட்டன் துணியில் போட்டு உலர்த்தவும்.
  • ஒரு கப் ராகி மாவை எடுத்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • இப்போது பிசைந்த மாவினை இட்லி பானையில் வைத்து வேகவைக்கவும்.
  • பின் ஒரு கடாயில் எள் மற்றும் நிலக்கடலை இரண்டையும் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.
  • எள் மற்றும் வேர்க்கடலை இரண்டையும் தனியாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  • வெல்லத்தை அரைத்து கொள்ளலாம் அல்லது பொடியாக அரைத்து கொள்ளவும்.
  • வேகவைத்த ராகி, அரைத்து வைத்த எள் மற்றும் வேர்க்கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின்னர் சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

சுவையான புரத சத்து மிக்க சிமிலி உருண்டை தயார்