பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது  ஒரு சாமியார் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மாட்டியுள்ளார். யார் அவர்? எப்படி நடந்தது இந்தச் சம்பவம்?


கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கள்ளகூட்டம் என்ற பகுதியில் 37 வயது மதிக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை சாமியார் ஒருவர் பூஜை செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக படம் எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். அத்துடன் அந்த சாமியார் அந்தப் பெண்ணிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தையும் ஏமாற்றியதாக புகாரில் கூறியிருந்தார். 


இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த சாமியார் திலீபை தேடி வந்தனர். அதன்பின்னர் எம்.எஸ்.கே நகர் பகுதியில் வசித்து வந்த சாமியர் திலீபை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மந்தரமூர்த்தி என்ற சாமியின் அருளை பெற்றவர் என்று கூறி பூஜைகள் செய்து வந்துள்ளார். 




அந்த சமயம் இந்தப் பெண் அவரிடம் வந்துள்ளார். அவருக்கு திருமணம் தள்ளி போவதற்காக பூஜை செய்வதாக கூறி அந்தப் பெண்ணை நம்பவைத்துள்ளார். அதன்பின்னர் பூஜை நாளன்று அந்தப் பெண்ணிற்கு அளித்த பிரசாதத்தில் தூக்க மாத்திரைய கலந்து கொடுத்துள்ளார். அந்தப் பிரசாதத்தை சாப்பிட்ட அவர் மயங்கிய பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் நிர்வாணமாக அவரை படமும் எடுத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்த 30 சவரன் நகை மற்றும் பணத்தையும் இவர் எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 


காவல்துறையினர் நடத்திய விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அவருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட உடன் அவரை சிறையில் அடைத்தனர். பல நாட்கள் அப்பகுதியில் கடவுளின் தூதர் என்று கூறி பூஜை செய்து வந்த நபர் தற்போது இந்த மாதிரியான பாலியல் புகாரில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் சரியான விசாரணை நடத்தி வேறு பெண்கள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க:  ’திருமணத்துக்கு முன்பான உடலுறவு குற்றமல்ல.. ஆனால் !’ - அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து என்ன?