தமிழ்நாட்டின் மழை மற்றும் கால நிலவரங்களை துல்லியமாக கணித்து கூறுவதில் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில், ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின்காந்த அலைகள் மூலமாக கிடைக்கும் தரவுகளை கொண்டு, குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு, நிகழ்நேர மழை நிலவரம் போன்றவற்றை, நிகழ்நேர மழை நிலவரம் போன்றவற்றை ஆய்வு மையத்தால் வழங்க முடிந்து வந்தது.


இந்த நிலையில், சென்னை துறைமுகக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ரேடார் 2018ல் பழுதடைந்தது. அதற்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால், பழுது நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், மக்கள் நேரடியாக நிகழ்நேர மழை நிலவரத்தை அறியமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.




இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரனிடம் கூறியதாவது,


“ பழுதாகியுள்ள ரேடார் விரைவில் சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும். இதற்கிடையில் பள்ளிக்கரணையில் உள்ள இந்திய பெருங்கடல் சார் தொழில்நுட்ப வளாகத்தில் புதிய ரேடார் நிறுவப்பட்டுள்ளது. இது நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. அதன்படங்கள் தற்போது வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.


பழைய ரேடார் பழுதால் வானிலை கணிப்பில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஹரிகோட்டா, திருவனந்தபுரத்தில் இயங்கும் இஸ்ரோ ரேடார்கள், காரைக்காலில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய ரேடார் ஆகியவற்றின் தரவுகளை பயன்படுத்தி வருகிறோம்.




நிகழ்நேர மழை நிலவரக்கணிப்பு ரேடார் தரவுகள் அடிப்படையில் மட்டுமின்றி, செயற்கைக்கோள் புகைப்படம், பலூன் மூலம் பறக்கவிடப்படும் கருவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. “


இவ்வாறு அவர் கூறினார்.


ரேடார் கருவி பழுதடைவதற்கு முன்பு ரேடார் படங்கள் http://www.imdchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் வழங்கப்படுகின்றன. இணையதள சேவை மற்றும் சமூக ஊடகங்கள் வருகையால் வானிலை ஆய்வு மையம் வெளியிடும் ரேடார் படங்களை தன்னார்வ அடிப்படையில் வானிலையை கணிக்கும் ஆர்வலர்கள் பயன்படுத்தி, வானிலை நிலவரங்களை பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்றவற்றில் வெளியிட்டு வந்தனர். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்  பெற்றது. மேலும், இணையதளத்தில் ரேடார் படங்களை மக்களை நேரடியாக பார்வையிட்டு, அப்போதைய வானிலை நிலவரத்தையும் தெரிந்து கொள்வது மிகவும் எளிதாக இருந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண