ஒரு குழந்தையை கவனமாக வளர்த்தெடுப்பது வாழ்க்கையின் வேறு எந்த சவாலான காரியங்களையும் விடக் கடினமானது என்பது உலகறிந்த உண்மை.


குழந்தை நடக்கத் தொடங்கியது முதல் அதை சாப்பிட வைத்துப் பழக்குவது, எழுதக் கற்றுக்கொடுப்பது என இவை அனைத்துக்கும் பொறுமை மிக மிக அவசியம். இவற்றுக்கு மத்தியில் 2 வயதுக்கும் குறைவான குழந்தை ஒன்று தன் அம்மாவுக்கு கரண்டியில் தோசை எடுத்துவந்து அழகாகப் பரிமாறும் வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. தன் குட்டி ஆண் குழந்தை தோசையை பொறுமையாகக் கரண்டியில் எடுத்து வந்து தனக்கு பரிமாறும் இந்த வீடியோவை ”என் வருங்கால மருமகளே வெல்கம்” என்ற பின்னணி ஒலிக்கோர்ப்புடன் தாய் பூரிப்புடன் பதிவிட்டுள்ளார்.






இந்த வீடியோ இணையத்தில் 12.3 மில்லியன் வியூஸ்களைக் கடந்தும் 11 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றும் இன்ஸ்டாவில் கலக்கி வருகிறது. ஹது எனும் இன்ஸ்டா பயனரான இப்பெண் இதே போல் தன் மகளை தன் வருங்கால மருமகன் எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனும் குறிப்புடன் தன் மகளின் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இவரது ரசனையான இந்தப் பதிவுகள் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.