பிரேக்கப் என்பது நம்மைப் பெரிதும் பாதிக்கும் ஒன்று. சிலர் தங்களுக்கு நேரும் பிரேக்கப்பை ஏற்கனவே எதிர்பார்த்திருப்பார்கள். சிலருக்கும் அது குறித்த எந்த எதிர்பார்ப்பும் இருந்திருக்காது. மேலும், பிரேக்கப் என்பது உடலில் ஏற்படும் வலியைப் போல உணரக்கூடும். அந்த வலியை மறைக்க நினைத்தாலும், அது மறைந்து போவதில்லை. எனவே உங்கள் முன்னாள் காதலரின் நினைவுகளில் இருந்து, பிரேக்கப்பில் இருந்து வாழ்க்கையை நகர்த்துவது எப்படி என்பது குறித்து இங்கு குறிப்பிடுகிறோம். 


1. உங்கள் முன்னாள் காதலரைத் தொடர்பு கொள்ளாதீர்கள். பிரேக்கப் என்பது சில நேரங்களில் மீண்டும் வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்குவது போன்ற உணர்வை அளிக்கலாம். எனவே உங்கள் முன்னாள் காதலரைத் தொடர்புகொள்ளாமல் தனியாக நேரம் செலவழிப்பது உங்கள் அடுத்த நகர்வைத் தீர்மானிக்க உதவலாம். இது அதிகம் அச்சமூட்டும் சிந்தனையாகத் தோன்றினாலும், நீங்கள் இதனை எதிர்கொண்டே ஆக வேண்டும். மேலும், வாழ்க்கையின் இந்தப் பகுதியை உங்களை விட்டு அகற்றுவதே உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். 



2. உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நபர் உங்களை விட்டு விலகினால், நீங்கள் தொலைந்துபோனதுபோல உணரலாம். பொது நண்பர்கள், நினைவுகள், எதிர்காலம் குறித்த திட்டங்கள் ஆகியவற்றை விட்டு எளிதில் விலக முடியாது. எனவே உங்கள் மீது அதிக அழுத்தத்தை நீங்களே அளித்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்மாக உங்களை சரிசெய்வதில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை பல்வேறு வாய்ப்புகளைத் தினமும் அளிக்கும். எனவே உங்கள் அடுத்த பாதையைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். நம்பிக்கையை விட்டுவிடக் கூடாது. 


3. நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள். நீண்ட காலமாக சந்திக்காத நண்பர்களைச் சந்தியுங்கள். புதிய நண்பர்களை உருவாக்குங்கள்; ஏற்கனவே இருக்கும் நண்பர்களுடன் புதிய திட்டங்களைப் போடுங்கள். மீண்டும் சமூகத்தில் உங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். மீண்டும் புதிய உறவுக்குச் செல்வது அவசியம் இல்லை. ஆனால் மீண்டும் மகிழ்ச்சியான ஒரு பொழுதை அனுபவிக்கும் அளவுக்கு மனதளவில் முன்னேறுங்கள். 


4. முன்னாள் காதலரைச் சமூக வலைத்தளங்களில் பின் தொடராதீர்கள். நீங்கள் இல்லாமல் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் உங்களுக்கு ஏற்படுவது இயல்பு. இதற்காக அவர்களை நீங்கள் அவர்களின் சமூக வலைத்தளக் கணக்குகளில் சென்று பார்க்க நேரிடலாம். எனினும், இது இனி உங்கள் வாழ்க்கை அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை தற்போது நேர்மறையான விவகாரங்களை ஏற்படுத்தும் இடத்தில் நீங்கள் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 



5. உடற்பயிற்சி மேற்கொள்வது பிரேக்கப்பில் இருந்து மீள உதவும். உடற்பயிற்சிக்குப் பிறகு தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, வாழ்க்கை குறித்த புரிதலும் அதிகரிக்கிறது. உடலில் எண்டாமார்ஃபின் சுரக்க உடற்பயிற்சிகள் உதவுவதோடு, உங்களை வலிமைப்படுத்துகிறது. 


உங்கள் முன்னாள் உறவில் இருந்து முழுவதுமாக விலகுவது அவ்வளவு எளிதானது அல்ல. இதனை அடைய குறிப்பிட்ட காலம் என்று எதனையும் கணக்கிட்டு செய்ய முடியாது. வலியின் அலைகள் சில நேரங்களில் உங்களை நோக்கி வரலாம். எனினும் அவை படிப்படியாக விரைவில் குணமாகும்.