Soft Chapati Preparation in Tamil: சப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி மிருதுவாக வரவில்லையா? அப்போ இந்த மாதிரி சப்பாத்தி மாவு பிசைந்து பாருங்க. ஒரு கப் கோதுமை மாவிற்கு 1 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். மேலும் தண்ணீர் சேர்க்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்காமல் ஒன்று அல்லது இரண்டு முறையில் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
மாவு பிசைதல்:
தண்ணீர் சேர்க்கும் போது இரண்டு கப் மாவிற்கு ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். ஒருவேளை தண்ணீர் அதிகமாகி விட்டதை போல் தெரிந்தால், ஒரு கைப்பிடி அல்லது தேவையான அளவு மாவை அதனுடன் சேர்த்து பிசைந்தால் சரியான பதத்திற்கு வந்து விடும். ஒருவேளை தண்ணீர் குறைவாக உள்ளதாக தெரிந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளலாம்.
நீங்கள் மாவு பிசையும் போது எண்ணெய் மற்றும் பால் சேர்த்தும் பிசையலாம். இப்படி செய்தால் சப்பாத்தி மிருதுவாக வருவது மட்டும் அல்லாமல் அதன் சுவையும் நன்றாக இருக்கும். நீங்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்தாலும் சப்பாத்தி மிருதுவாகவும் நல்ல மணம் மற்றும் சுவையாக இருக்கும்.
வறண்ட சப்பாத்தி மிருதுவாக
சப்பாத்தி காய்ந்து வறண்டு விட்டால் இனி தூக்கி போட வேண்டாம். ஒரு சில நிமிடங்களிலேயே அதை புதிதாக சுட்ட சப்பாத்தியை போன்று மிருதுவாக மாற்றி விட முடியும். வறண்ட சப்பாத்திகளை இட்லி அவிப்பது போன்று இட்லி பாத்திரத்தில் சேர்த்து 5 லிருந்து 8 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
அல்லது நீங்கள் இட்லி அவிக்கும் போது மேல் தட்டில் மட்டும் வறண்ட சப்பத்திகளை வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் இட்லியையும் அவிக்கலாம் சப்பாத்தியையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் சமையல் எரிவாயுவையும் மிச்சப்படுத்தலாம்.
மேலும் படிக்க
Banana Bonda: தித்திப்பான வாழைப்பழ போண்டா! சூப்பர் சுவையில் அசத்தலாக செய்வது இப்படித்தான்!
Raddish Pachadi: முள்ளங்கி பச்சடி! இப்படி செய்தால் கூட ஒரு கரண்டி எக்ஸ்ட்ரா வாங்கி சாப்டுவீங்க!
Bread Chilli:காரசாரமான சில்லி பிரெட்... இப்படி செய்தால் சுவை வேற லெவலில் இருக்கும்..