கடற்கரையில் காதலனை மரத்தில் கட்டிபோட்டுவிட்டு, கல்லூரி மாணவியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
நாட்டில் பெண்கள் மீதான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனை சட்டங்களை செயல்படுத்தினாலும், சில மனித மிருகங்கள் மட்டும் மாறுவது இல்லை. போலீசாரின் கண்காணிப்பு இடத்தில் நாட்டில் ஏதாவது ஒரு பெண் உடல் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
Telangana: பணம் கட்டுறியா? போட்டோவ மார்பிங் பண்ணவா? சீன லோன் செயலியின் அடாவடி!! சிக்கிய இருவர்!!
இந்த நிலையில், ஆந்திர மாவட்டத்தில் காதலனை கட்டிப்போட்டு காதலியை இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப்பட்டினத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மசூலிப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் காதல் ஜோடிகள் ஃபிஷிங் ஹார்பர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, மதுபோதையில் இரண்டு இளைஞர்கள் கடற்கரைக்கு வந்தனர். காதல் ஜோடி தனியாக இருந்ததை கண்டு அங்கு சென்றனர்.
இதன்பின்னர், அவர்களிடம் தகராறில் ஈடுபட்ட போதையில் இருந்த இளைஞர்கள், திடீரென்று காதலனை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். காதலன் தடுக்க முயற்சித்தபோது, அவரை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு, பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதருக்கு செல்போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டுள்ளார்.
இதன்பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மசூலிப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அவர் கொடுத்த தகவல்களை வைத்து நாகபாபு என்ற இளைஞரை கைது செய்தனர். மற்றொரு இளைஞரை தேடி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்