முருங்கை காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க
முருங்கை காய் கடையில் இருந்து வாங்கி வந்த இரண்டு நாட்களிலேயே காய்ந்து, வதங்கி விடும். இதைக் கொண்டு சமைத்தால், குச்சியைப் போன்று இருக்கும். முருங்கை காய் வாடி வதங்காமல் இருக்க, முருங்கைகாயை நாம் சமையலுக்கு வெட்டுவது போன்று வெட்டி எடுத்து ஒரு டப்பாவுக்குள் போட்டு, இதில் சிறிதளவு எண்ணெய் ( சமையலுக்கு பயன்படுத்தும் ஏதாவது) சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் அனைத்து முருங்கை துண்டுகளிலும் படும்படி டப்பாவை நன்கு குலுக்கி விட வேண்டும். பின் டப்பாவை மூடி ஃப்ரிட்ஜிக்குள் வைத்து விட வேண்டும். இப்படி ஸ்டோர் செய்து வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் முருங்கை காய் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
சிங்க்கில் துர்நாற்றம் வராமல் இருக்க
நம் வீட்டில் கறி, மீன் போன்ற அசைவ வகைகளை சமைக்கும் முன் அதை கழுவி அதன் தண்ணீரை சிங்க்கில் ஊற்றுவோம். இதனால் சிங்க் இரண்டு நாட்களுக்கு துர்நாற்றமாக இருக்கும். இப்படி சிங்கில் துர்நாற்றம் வராமல் இருக்க, நாம் பயன்படுத்திய ஷாம்பு கவரை வெட்டி, இந்த கவரின் உட்பகுதி சிங்க்கில் படும்படி பிடித்து நன்கு சிங்க் முழுவதும் தேய்த்து விட்டு, பின் கழுவ வேண்டும். இப்படி கழுவினால், சிங்க் வாசமாக இருப்பதுடன், துர்நாற்றம் வீசாது. ஷாம்பு கவர் இல்லையென்றாலும், சிறிதளவு ஷாம்புவை சிங்கில் போட்டு தேய்த்து கழுவி விடலாம்.
தங்க நகைகளை பளபளப்பாக மாற்ற
தங்க வளையல், தங்க கொலுசுகளை தினமும் நாம் அணிந்திருந்தால், அதன் பளபளப்புத் தன்மை நீங்கி, மங்கிப்போய் காட்சியளிக்கும். தங்க ஆபரணங்கள், பளீச்சென இருக்க, அந்த ஆபரணத்தை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, ஒரு தேவையில்லாத பழைய ப்ரெஷ்ஷில் ஷாம்பூவை தொட்டு, தங்க நகையின் மீது தேய்த்து கொடுக்க வேண்டும். ப்ரெஷ் நகையின் அனைத்து பகுதியிலும் படும்படி தேய்த்து விட வேண்டும். பின் நகையை தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும். இப்படி செய்தால் நகை புதியது பேன்று பள பளவென மின்னும்.
மேலும் படிக்க
Household Tips: உடையாமல் முட்டை வேகவைக்க! பாத்திரத்தில் ஒட்டாமல் மாவு பிசைய - வீட்டுக் குறிப்புகள்!
House Hold Tips: இட்லி மிருதுவாக வர, ஜீன்ஸ் பேண்டை தைக்க - இதோ எளிய டிப்ஸ்