நீளமான அடர்த்தியான, கருமையான தலைமுடி வேண்டும் என்பது ஏராளமான பெண்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் வேலைகளின் நடுவே அதை நாம் மறந்து விடுகின்றோம். முடிகொட்டுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் சிலரை மன உளைச்சலுக்கு கூட ஆளாக்குவதாக சொல்லப்படுகின்றது. அதிக ரசாயணங்கள் நிறைந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதாலும் கூந்தல் சேதமடைவதாக சொல்லப்படுகின்றது.


இயற்கை முறையில் முடி பராமரிப்பு:


நாம் குறைந்த ரசாயணங்கள் உள்ள ஷாம்புகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். அல்லது இயற்கையாக கிடைக்கும் சீயக்காய் புவந்திக்கொட்டை ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டு , இரவில் அதை போதுமான அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதை அரைத்து தலைக்கு குளிக்கலாம். இது உங்கள் கூந்தல் சேதமடைவதை தடுப்பதுடன் கூந்தல் நன்குவளர உதவுகிறது. கூந்தலை பராமரிக்க ஒரு சில டிப்ஸ்- களை பார்க்கலாம்.


1. வெந்தயத்தை குறைந்தது 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும். இது உங்கள் கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக செயல்படும். 


2. ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரைக் கொண்டு தலைக்குளித்து வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் தொல்லையும் குறையும்.


3. தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும். தலையில் நரைமுடி இருந்தால் அவை ப்ரெளன் நிறமாக மாறி விடும்.


4. நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும் என்றும் முடியும் நன்கு செழித்து வளறும் என்று கூறப்படுகிறது.


5. முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரை நீங்கும். முளைக்கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம். இதன் மூலம் நரை விலகும் என கூறப்படுகிறது.


6.இருபது செம்பருத்திப் பூக்களைப் பறித்து வந்து, காம்பை நீக்கி சுத்தம் செய்து தேவையான தேங்காய் எண்ணெயில் கசக்கிப் போட்டு, சடசடப்பு நின்றதும் இறக்கி வைத்து, ஆறிய பின் பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு தினமும் தடவி வந்தாலும் முடி செழித்து வளரும் என்று கூறப்படுகிறது.  முடி உதிர்வதும் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. 


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.


மேலும் படிக்க


PM Modi Speech: சுதந்திர தின உரையில் மணிப்பூர் விவகாரம் - பிரதமர் மோடி என்ன சொல்லி இருக்காரு பாருங்க..!


Independence Day Speech: 77வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் நீண்ட நேரம் உரையாற்றிய பிரதமர் யார் தெரியுமா?