காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றது போல் மனித நாகரிகம் வளர்ந்து கொண்டு செல்கிறது.அதற்கு சமையல் மட்டும் விதிவிலக்கு அல்ல.மண்பானையில் இருந்து விசில் பறக்கும் குக்கர் வரை வளர்ச்சி எங்கோ சென்று விட்டது.


இப்பொழுது அனைத்து வீடுகளிலும் குக்கர் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.சாப்பாடில் இருந்து கறி மற்றும் அனைத்து உணவு வகைகளையும் வேக வைக்க குக்கர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்துவதால் வேலை சுலபம் மற்றும் நேரம் குறைவு என்பதால் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.


ஆனால் குக்கரை சரியான முறையில் கையாலாவிட்டால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பல இடங்களில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் சிறிய கவனக்குறைவே ஆகும்.


பிரஷர் குக்கரின் தளர்வான ரப்பரைப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் சிலவற்றை நாம் இங்கு கற்றுக் கொள்ளலாம். எப்போதுமே சமைத்த பிறகு குக்கரின் ரப்பரைக் கழுவ மறக்கக்கூடாது ,அதனை உரிய முறையில் பாவித்தால் மட்டுமே அது நமக்கு நெடுங்காலம் பயனளிக்கும்.


 இதனை தவிர்க்க சில வழிமுறைகள்..


 குக்கரின் கைப்பிடியில் ஒரு ரப்பர் இருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். இந்த ரப்பர்  குக்கரின் அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் வெப்பநிலையை பராமரிக்கவும் பயன்படுகிறது. 


ஆனால் ரப்பர் தளர்வானால், சமைக்கும் போது பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.ரப்பர் தளர்வாக இருக்கும்போது, ​​​​அது கடினமாகவும் சோர்வாகவும் மாறும். இப்போது, ​​தளர்வான ரப்பரைக் கொண்டு சமைக்கும் போது உங்களுக்கு உதவக்கூடிய சில விஷயங்களையும், அதை எப்படி இறுக்குவது என்பதையும் பார்க்கலாம்.


நம் வீடுகளில் குக்கரில் பயன்படுத்தும் ரப்பரை அம்மா ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்திருப்பதை பார்த்து இருப்போம். 


அது போல் ரப்பரின் மீது குளிர்ந்த நீரை வைக்கவும் அல்லது 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இது ரப்பரை இறுக்கமாக்கும் மற்றும் அது குக்கரில் எளிதில் பொருந்தும்.
 குக்கரில் அழுத்தம் உருவாகும் வரை மூடியைப் பிடிக்கவும்.


மேலும் , உங்கள் ரப்பர் தளர்வான நிலையில் இருந்தால் அதன் மேல் செலோடேப்பை  மூடியை சுற்றி ஒட்டி குக்கரில் அழுத்தத்தை உண்டாக்கலாம். பெரும்பாலும் குக்கரால் ஏற்படும் விபத்துகள் அதன் மூடியை சரியான முறையில் மூடாததால் தான் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.


அதன் மூடியானது ஒரு சில நேரங்களில் சரியான முறையில் மூட முடியவில்லை என்றால் ஒரு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு குக்கரின் மூடியை சுற்றி மாவை வைத்து மூடி பிரஷர் உருவாகும் வரை பிடிக்கவும்.இதனால் மூடியானது நன்கு மூடிக்கொள்ளும்.இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.


இதைப் போலவே குக்கரில் சேப்டி வால்வு என்று ஒன்று  இருக்கும். குக்கரில் பொருட்களை சமைப்பதற்கு முன்பாக மூடியை மூடும் அந்தச் சமயத்தில் அந்த வால்வின் உட்புறம் சுத்தமானதாக இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும் .ஏனென்றால் ஒரு வேளை குக்கரின் மேலே போடப்படும் விசில் என்று சொல்லப்படும் வெயிட்டானது ஏதாவது ஒரு காரணத்தினால் மேல் எழும்பி நீராவியை வெளியே விடாத தருணத்தில் இந்த வால்வானது சிறிதாக உருகி குக்கரில் உருவாகி இருக்கும் அதிகப்படியான அழுத்தத்தை வெளியேற்றும் ஆகவே தான் இதை சேஃப்டி வால்வு என்று  வைத்திருக்கிறோம்


குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாவது இதை சரி செய்யும் கடைகளுக்கு கொண்டு சென்று சேஃப்டி வால் மற்றும் குக்கர் மூடியில் பயன்படுத்தும் ரப்பரை புதிதாக மாற்ற வேண்டும் .
இதைப் போலவே 10 வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் இருக்கும் பழைய குக்கர்களையும் மாற்ற வேண்டும்


அதேபோல், சமைக்கும் போது  குக்கரை உரிய நேர அளவீடுகளுடன் பயன்படுத்த நாம் தெரிந்து கொள்ள வேண்டும், அதிக அளவில் அவை வெப்பத்தில் இருக்கும் போது விரைவில் தளர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


ஆகவே குக்கரில் உள்ள ரப்பரை உரிய பராமரிப்பு முறைகளுடன் பயன்படுத்தினால்  ரப்பர் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது.