பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஓடிக்கொண்டிருப்பது தான் காலகட்டத்தில் கட்டாயமாக உள்ளது. 


ஆனால் ஆண்களைப் போன்று பெண்கள் வேலைக்கு சென்று வந்த பின்பு சாப்பிட்டுவிட்டு உறங்குவதில்லை .பெண்களின் பணிகள் வீட்டிலும் தொடரும் . சில பெண்களுக்கு பொதுவாகவே அவர்களின் உலகம் சிறிதாகவே காணப்படுகிறது . அவர்கள் பெரும்பாலும் தன் குடும்பத்தையே உலகமாக கொண்டிருக்கிறார்கள் .


 ஏனெனில் பெண்களுக்கு இணையாக குழந்தைகள் மற்றும் வீட்டை யாராலும் கவனிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை . ஏனெனில் வீட்டு வேலை பார்ப்பது மிகவும் கடினம் .பணிக்கு செல்லும் பெண்கள்  அதிக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்திற்கும் அதிக அளவில் பாதிப்படைகின்றனர் . 


வேலை முடிந்து வீட்டிற்கு வரும் பெண்கள் அடுத்த வேலை  வீட்டில் என்ன சமைக்கப் போகிறோம்? என்ற கேள்வியில் தொடங்கி சாப்பிட்டபின் நாளை என்ன சமைத்தால் வேலைக்கு நேரத்திற்கு செல்ல முடியும் ,நாம் செய்யும் உணவானது நம் குழந்தைகளுக்கு பிடிக்குமா? நம் கணவருக்கு பிடிக்குமா? என்ற கேள்வியில் அவர்களின் இரவானது ஒவ்வொரு நாளும் முடிந்து விடுகிறது .


 அவர்களுக்கு பெரும்பாலும் ஓய்வு என்பது அரிதாகவே உள்ளது. இதனால் சில பெண்கள் உடல்நலம் அதிக அளவில் பாதிப்படைகின்றனர்.இந்த குழப்பத்திற்க்கும் ,மன அழுத்தத்திற்கும் ஒரு சில முன்னேற்பாடுகள் செய்தால் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அவர்களது பணி சுமை வீட்டில் குறையவும் மன நிம்மதி  மற்றும் மனக்குழப்பத்தில் இருந்து வெளிவரலாம் . 


பொதுவாக பணிக்குச் செல்லும் பெண்கள் ஒரு அட்டவணையை பின்பற்றினால் அவர்களின் பணி சுமையானது குறையும் என சொல்லலாம்.உங்களின் அன்றாட பணிகளை ஒரு திட்டமிடலுடன் செய்தால் அதன் நேரமானது அதிகளவில் குறையும். எந்த வேலை செய்தாலும் ஒரு ஒழுங்கான முறையில் செய்தால் அந்த வேலையானது சிறப்பாக முடியும் .நீங்கள் பல பணி செய்யும் ஒருவராக இருந்தால் நேரம் தவறாமை இருக்க வேண்டும்.


 நீங்கள் ஒரு வேலையை எப்போது செய்தால் சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கேற்ப வேலை செய்தால் அதன் நேரம் அதிகளவில் குறையும். நீங்கள் வீடாக இருந்தாலும் அலுவலகமாக இருந்தாலும் உங்களால் செய்ய முடிந்த வேலையை மட்டுமே கையில் எடுக்க வேண்டும்.


 உங்களுக்கு நேரம் இல்லாத போது கூறும் எந்த வேலையும் வேண்டாம் என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மன அழுத்தத்தை அதிக அளவில் குறைக்கும்  .அதேபோல் வாழ்க்கையில் சில நேரங்களில் சில குறுக்கு வழிகளை நாம் பின்பற்ற வேண்டியிருக்கும் சில வேலைகளை குறுக்கு வழியில் செய்தால்தான் அந்த வேலையை உரிய நேரத்தில் முடிக்க முடியும்.


 .உதாரணத்திற்கு நீங்கள் காலையில் என்ன சமைக்க போகிறீர்கள் என்பதை முன்னரே முடிவு செய்து ,அதற்கான காய்கறிகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டால் காலையில் உணவானது குறுகிய நேரத்தில் தயாராகி விடும். பொதுவாக அனைத்து வீட்டிலும் பாத்திரம் விளக்குவது மிகப்பெரிய வேலையாக உள்ளது. நீங்கள்  உங்களுக்கு தேவையான ஒரு சில பாத்திரங்களை எடுத்து அதைக் கழுவி பயன்படுத்தினாலே அந்த வேலையை எளிமையாக முடிக்கலாம் . 


இந்த வழிமுறைகளை பயன்படுத்தினால் மன அழுத்தம் குறைந்து சிறிது ஓய்வு கிடைக்கும்.