மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான லவங்கப்பட்டையை பழங்காலம் முதலே சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இது இலவங்கப்பட்டை, அல்லது கருவாப்பட்டை என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கபடுகிறது.
அதிலும் உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனை ,கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இலவங்கப்பட்டை செயல்படுவதாக கூறப்படுகிறது. எப்போதுமே பட்டை சேர்த்த உணவு பொருள்கள் அதிக நறுமணத்துடனும், மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நல்ல உயர்தரமான பட்டை இலங்கையில் தான் அதிகம் விளைகிறது என கூறப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நாம் அதிகளவாக லவங்கப்பட்டை சேர்ந்திருப்பதை காண முடிகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் இந்த இலவங்கப்பட்டை முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் லவங்கப்பட்டையின் நறுமணமானது மன அழுத்தத்தை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது.
இலவங்கப்பட்டையில் ஆண்ட்டி-ஆக்ஸிடண்ட்கள், விட்டமின் ஏ, இ,டி,கே போன்றவை நிறைந்திருக்கின்றன. இலவங்கபட்டையிலிருந்து எடுக்கப்படும் மருத்துவ குணமிக்க தைலம், இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், பற்பசை, வாசனை திரவிய பொருள்களில் கலக்கப்படுகிறது. லவங்கப்பட்டையில் உள்ள வேதிப்பொருட்கள் மனித உடலில் ஏற்படும் நீரழிவு நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
இலவங்கப்பட்டையின் ஆரோக்கிய நன்மைகள்:
மருத்துவ குணமிக்க இந்த லவங்கப்பட்டை பொதுவாக எல்லோரது சமையலறைகளிலும் இருக்கும். அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை அனைத்து சமையல்களிலும் இலவங்கப்பட்டை சேர்த்துதான் சமைக்கப்படுகிறது. ஆனாலும் காலப்போக்கில் அதன் பயன்பாடு குறைந்து அது தற்போது வாசனை திரவியங்களிலும் ,ஏனைய பாவனை பொருட்களில் மட்டுமே இருப்பதை காண முடிகிறது. இருந்தபோதிலும் தொடர்ந்து மருத்துவர்கள் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
ரத்த சர்க்கரையளவு ,இதய நோய் காரணிகள், அதிகளவான கொழுப்பை குறைக்கும் தன்மை போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது லவங்கப்பட்டை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில் இலவங்க மரத்தின் பட்டை, இலைகள், பூக்கள், பழங்கள் மற்றும் வேர்கள் என அனைத்து பாகங்களையும் சாறாகவும் ,தூளாகவும் எண்ணையாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்த அளவில் லவங்கப்பட்டை ஒரு உன்னதமான மசாலா பொருளாகும். அசைவ உணவுகள் முதல் சைவ உணவு வரை எல்லாவற்றிலும் இந்த இலவங்கப் பட்டை சேர்த்து சமைக்கப்படுகிறது. அதன் நறுமணம் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் போன்றவற்றிற்காக இன்றளவும் சிறிதேனும் அளவாவது சமையலில் இந்த பட்டையை சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இலவங்கப்பட்டையின் 8 ஆரோக்கிய நன்மைகள்:
1. செரிமானத்தை மேம்படுத்துகிறது
2.உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
3.உடலில் அதிகளவு கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது
4.பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
5.சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் வலிகளை குறைக்கிறது
6.வயிற்று வலி, குமட்டல் ,செரிமான பிரச்சனை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
7.PMS மற்றும் மாதவிடாய் வலியைக் குறைக்கிறது
8. எடை குறைப்பிற்கு உதவுகிறது
லவங்கப்பட்டையில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது பல்வேறு வைரஸ் தொற்றுகள், நோய்க்கிருமிகள் உடலை தாக்குவதில் இருந்து பாதுகாக்கிறது. அதேபோல் உடலில் புதிய செல்களை உருவாக்கி உடலை புதுப்பிக்க வழி வகை செய்கிறது. கூடுதலாக, சின்னமால்டிஹைட் , ஆண்டிமைக்ரோபியல் குணங்களைக் இலவங்கப்பட்டை கொண்டுள்ளதால் வீரியமிக்க நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.