அகத்தின் அழகு முகத்தில் தெரியும் , இந்த பழமொழி மாதிரி உடம்புக்குள்ள ஏதேனும் பிரச்னை தெரிந்தால் உடனடியாக முகத்தில் தெரிய தொடங்கி  விடும்.முகத்தின்நிறம் மாறுதல், வீக்கம், மற்றும் பல அறிகுறிகள் முகத்தில் தெரிய தொடங்கி விடும் . சோகமாகவோ வருத்தமாக  இருந்தால்,முகம் வாடி போயும், மிகவும் மகிழ்ச்சியான சூழலில், மிகவும்  பொலிவுடனும் இருக்கும். இதே போல், முகத்தில் தெரியும் மற்ற மாற்றங்களை  பற்றியும், அதனால் என்ன விதமான பிரச்சனைகள் வரும்  என்பதையும்  தெரிந்து கொள்ளலாம்.


மஞ்சள் நிறமாக இருந்தால் - மஞ்சள் காமாலையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கும். கண்ணின் வெள்ளை பகுதி மஞ்சள்நிறத்துடன் இருக்கும். மேலும் முகத்தில் எப்போதும் இருக்கும் நிறம் மாறி மஞ்சளாகவோ வெளிறி போயோ இருக்கும்.


கண்களை சுற்றி வீக்கமாக இருத்தல் - கீழ் இமைகளுக்கு அடியில், நீர் கோர்த்தது போல், லேசாக வீங்கி இருக்கும்.  இதற்கு காரணம், தூக்கமின்மை,  அளவுக்கு அதிகமா உப்பு சேர்த்து கொள்ளுதல், ஹார்மோன் மாற்றங்கள்  , மேக்கப், ஒவ்வாமை , இது போன்ற காரணங்களினால் கண்களை சுற்றி வீக்கமாக இருக்கும்.


பெண்களுக்கு முகத்தில் முடி வளர்தல் - இதற்கு ஹிர்சூட்டிசம் என்று பெயர். pcos எனும் நீர்க்கட்டி பிரச்னை, மாதவிடாய் சுழற்சி முறையாக இல்லை என்றால் பெண்களுக்கு தாடி மீசை போன்று முடி வளரும்.


ஆண்களுக்கு முகத்தில் முடி உதிர்தல் - சில ஆண்களுக்கு அலோபேசியா எனும் முடி உதிர்தல் பிரச்னை இருக்கும். இது முகத்தில் தாடி , சிலருக்கு  புருவத்தில் இருக்கும் முடி  .உதிர்ந்து விடும்.  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வரும்.




உதடு வறண்டு போய்  இரத்தம் வருதல் - உடலில்  நீர்சத்து குறைவாக இருந்தால் வரும். சுற்றுசூழல் காரணமாக வரும். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக வரும். இதற்கு தேங்காய் எண்ணெய் தடவுதல்  மூலம் சரி  ஆகும்.




மச்சம் - இது பிறந்ததில் இருந்து சிலருக்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகும் வரும். இது பெரிய அளவில் எந்த பிரச்னையும் தருவதில்லை. ஆனால் இது வளர தொடங்கினாலோ, தோலின் நிறம் மாற தொடங்கினாலோ, மருத்துவரை அணுகுவது நல்லது.


மெலஸ்மா எனும் முகத்தில் நிறம் மாறுதல் - முகத்தில்  கன்ன பகுதிகளில், அடர் நிறத்தில் நிறம் மாற தொடங்கி இருக்கும். நல்ல கறுப்பாகவோ, பிரவுன் நிறத்திலோ மாற்றம்  ஏற்படும்.இது  பிரசவ நேரத்தில் பொதுவாக ஏற்படும். இது மிகவும் பொதுவான  ஓன்று.ஹார்மோன் மாற்றங்களினால் இது போன்ற பிரச்னை வரும். உடலுக்கு காட்டும் அக்கறையை முகத்திற்கும் காட்டுங்கள். உங்களின் அடையாளம் அது.