கேரள பெண் பழனியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தங்கும் விடுதி உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.


கேரள பெண் பழனியில் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புகார் அளித்த நபர் கூறிய தகவலும், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளுக்கும் முரணாக இருப்பதன் காரணமாக சந்தேகம் அடைந்த போலீசார் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் புகார் அளித்த தர்மராஜிடம் விசாரணை செய்ய  கேரளாவிற்கு கிளம்பியுள்ளனர். இந்த நிலையில் வழக்கின் முக்கிய திருப்பமாக தங்கும் விடுதி உரிமையாளர் முத்து செய்தியாளர்களை சந்தித்தார். அன்றைய தினத்தில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து, அம்மா மற்றும் மகன் என்ற பெயரில் இருவர் வந்து அறை எடுத்து தங்கியதாகவும் மது போதையில் தகராறு செய்ததால் அவர்களை  அறையை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.


மேலும் சில நாட்களுக்கு முன்பு தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு கேரள போலீசார் எனக்கூறி பெண்ணொருவர் தங்கள் மீது புகார் அளித்துள்ளதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டும் வகையில் பேசியதாகவும் தங்கும் விடுதி உரிமையாளர் கூறியுள்ளார். கேரள பெண் பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தங்கும் விடுதி உரிமையாளர், பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ளது இந்த வழக்கில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.




இதுகுறித்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.விஜயகுமாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :-


கடந்த 19ஆம் தேதி  தங்கம்மாளும், தர்மராஜ் ஆகிய இருவரும் பழனியில் தங்கியிருந்த விடுதியில்  மதுபோதையில் தகராறு செய்ததால், விடுதி உரிமையாளர் அவர்களை வெளியேற்றி விட்டதாகவும், அதன்பிறகு 25ஆம்தேதி வரை இருவரும் பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சர்வசாதாரணமாக உலா வந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார். மேலும் தர்மராஜ் விடுதி உரிமையாளரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் கேரள காவல்துறை பெயரை பயன்படுத்தி விடுதி உரிமையாளரை மிரட்டியதும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட தங்கும் விடுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தர்மராஜ் உடைய சகோதரியிடம் விசாரணை மேற்கொண்டதில், இருவருக்கும் திருமாணமாகவில்லை என்பதும், இருவரும் கணவன் மனைவி அல்ல என்ற உண்மையும் தெரியவந்துள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்டதாக கூறும் பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்புணர்வு நடந்ததற்கான எவ்வித உடல்காயங்களும், மர்ம உறுப்புகளில் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  




இந்நிலையில் இந்தவழக்கு தொடர்பாக விசாரணை செய்ய தமிழக காவல்துறை சார்பில்  திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள்  கேராளவிற்கு விரைந்துள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம்  164பிரிவின்கீழ் கேரள போலீசார் நடத்திய ரகசிய விசாரணை குறித்த ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை  தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Trisha | பிட்னஸா? பெட்ரோல் விலை உயர்வா? சைக்கிளிங் நாயகிகளிடம் கேள்வியெழுப்பும் இணையவாசிகள்!