சாப்பிட்ட உடன் செய்யும் சில விஷயங்களை செய்ய கூடாது. இவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்
டீ காபி - சாப்பிட்ட உடன் டீ காபி குடிப்பதால், உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது. சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து காபி அல்லது டீ குடிக்கலாம். இரவில் அதையும் தவிர்ப்பது நல்லது
குளிக்க கூடாது - சாப்பிட்ட உடன் குளிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். வயிற்று பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைவதால் செரிமானமின்மை பிரச்சனை ஏற்படும். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குளிப்பது நல்லது
சாப்பிட உடனே பழங்களை சாப்பிடாதீர்கள் - பழங்களை செரிப்பதற்கான நொதிகள் மாறுபடும். சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடுவதால் செரிமானம் முழுமையாக நடக்காது. அதனால் வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பழங்களை சாப்பிடலாம்.
ஐஸ் வாட்டர் குடிக்காதீர்கள் - சிலருக்கு சாப்பிட்டு முடிந்த பிறகு ஜில்லென்று தண்ணீர் குடிக்க பிடிக்கும். அப்படி செய்வதால் வயிற்று அமிலங்கள் சுரக்காமல் செரிமானமின்மை மற்றும் மலசிக்கல் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
நடக்காதீர்கள் - அதிகமாக சாப்பிட்டால் செரிப்பதற்காக நடக்கலாம் என சொல்லி கேட்டு இருப்பீர்கள். அது சரி இல்லை. வயிறு நிறைய சாப்பிட்டு நடந்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் மேலெழுந்து நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வரும். அதனால் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து நடப்பது நல்லது.
பிரஷ் செய்யாதீர்கள் - சாப்பிட உடனே பிரஷ் செய்வது நல்லது என்று தானே கேள்வி பட்டு இருக்கிறீர்கள். ஆனால் அது தவறு. சாப்பிட்ட உடனே வாய் கொப்பளியுங்கள். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து பிரஷ் செய்யுங்கள்
புகை பிடிக்காதீர்கள் - சாப்பிட உடன் புகை பிடிப்பதால், 10 சிகரெட் குடித்ததற்கு சமம். இதனால் குடல் மற்றும் இரைப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
தூங்க கூடாது - சாப்பிட்ட அடுத்த நிமிடமே தூங்கச் செல்வது தவறான பழக்கமாகும். இதனால் செரிமானமின்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வரும். உடலில் அதிகம் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் வரலாம். உடல் எடை அதிகமாகும். அதனால்
சாப்பிட உடனே தூங்காமல், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தூங்க செல்வது நல்லது. பகலிலும் சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு அரை மணி நேரம் தூங்குவது நல்லது.