'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு புடவை கட்டி நடனமாடும் ஒரு 10 வயது குழந்தையின் விடியோவை பெரும்பாலானோர் பார்த்திருப்போம். ஒரு சிறுவனுடன் அந்த பெண் குழந்தை ஆடும் விடியோ பல தளங்களில் பகிரப்பட்டிருந்தது. எந்த வரைமுறைகளும் இல்லாத, ரீல்ஸ் போன்ற வசதிகள் பல அப்ளிகேஷன்களில் கிடைக்கிறது. இளைஞர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி பாட்டு, டான்ஸ், வசன உச்சரிப்புகள் எனத் தங்களின் தனித்திறன்களை உலகறியச் செய்கின்றனர்.


இங்கே யாரிடமும் வாய்ப்பு கேட்டு காத்திருக்கத் தேவையில்லை, முறையான பயிற்சியும் தேவையில்லை. தான் விரும்பியவற்றை, விரும்பிய இடத்திலிருந்து செய்துகொள்ள மிகவும் வசதியாக இருந்தது. அது மற்றவர்களுக்குப் பிடித்தால் பாராட்டு மழையில் நனையலாம். பிடிக்காவிட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை, வீண் மன உளைச்சலும் இல்லை. அப்படி சில வருடங்கள் முன்பு வரை டிக் டாக் என்ற செயலி இருந்தது, அதனை தடை செய்த பின்பு நூறு டிக் டாக் செயலிகள் முளைத்தது மட்டுமின்றி, பிரபல சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்கள் ரீல்ஸ் எனும் அம்சத்தை உருவாக்கிவிட்டனர். அதுபோக யூட்யூப் ஷார்ட்ஸ், பேஸ்புக் ஸ்டோரி, என பல வகையில் உருவம் பெற்றன.


தற்போது பேஸ்புக்கிலும் ரீல்ஸ் வசதி வந்துவிட்டது. இது போன்ற ஆப்களுக்கு உலகம் முழுவதும் பயனாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். அது மட்டுமின்றி இதனை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு எதுவும் கண்காணிக்கப்படுவதில்லை, சிறு வயது குழமதைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணுகலாம். இப்படிப்பட்ட செயலியில் உள்ளே உள்ள கண்டெண்ட்களில் ஏதாவது வரைமுறைகள் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சிறு வயதினருக்கு தவறான படிப்பினையை கொடுக்கும் பல வீடியோக்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன. அதன் விளைவு, சமீபத்தில் ஒரு 10 வயது குழந்தை பேறு சிறுவனுடன் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு ரீல்ஸ் செயது வெளியிட்டது.



ரீல்ஸ் அஃபிசியல் தமிழ் என்ற பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வைரல் அடைந்த இந்த ரீல்ஸ் பலரை சென்று அடைந்தது. அத்துடன் அந்த ரீல்ஸ் வீடியோ பார்க்கப்பட்ட பலரால் விமர்சிக்கவும் பட்டது. இது போன்ற பாடலுக்கு இது போன்ற நடன அசைவுகளை, இப்படி உடை உடுத்தி ஆடச்செய்யலாமா என்று பலர் கேள்விகேட்டிருந்தனர். புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடல் 'ஐட்டம் பாடல்' என்று கூறப்படும் வகையை சேர்ந்த பாடல் ஆகும். இந்த வகை பாடல்களே அறத்திற்கு எதிரானதாகவும், பெண்களை சிறுமை படுத்தும் விதமாக இருப்பதாகவும் பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் 'ஊ சொல்றியா மாமா' பாடல் ஆண்களின் காமப்பார்வையை சட்டையர் செய்யும் வரிகளை கொண்டிருந்தாலும், அதன் வீடியோவும் பெண்களை போகப்பொருளாக காட்டியே எடுக்கப்பட்டிருந்தது.


பல குழந்தைகள் தங்கள் சமூக வலைத்தளங்களை அவர்களே பயன்படுத்துகின்றனர், சிலர் பெற்றோர் கண்காணிப்பில் இவற்றை செய்கின்றனர். ஆனால் எப்படி இருந்தாலும், இதுபோன்ற நடனம், பாடல், அதற்கு ஏற்றாற்போல உதடுகளை அசைத்து ஆடுவது ஆகியவற்றை குழந்தைகள் செய்வது தவறுதான். அதனை பெற்றோர்கள் அறியாமல் குழந்தையின் பிரபலத்துக்காகவோ திறமை என்று நினைத்தோ செய்யலாம். இதனை பெற்றோரே ஆதரித்தாலும், பெற்றோர்கள் குழந்தைகளை வற்புறுத்தினாலும் இந்த வீடியோக்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் ஊடகத்தையும் பிரதிபலித்தாலும், இந்த கருத்துகள் பெண்களை இழிவுபசுத்துவதை, அவர்களின் பாலியல் தன்மை மிகைப்படுத்தப்படுவதை இயல்பாக்குகிறது.


இதனை தவறாக புரிந்துகொள்ளும் குழந்தைகளுக்கு மனரீதியாக ஆபத்துகள் வர வாய்ப்புள்ளன. அந்த குழந்தைகள் வருங்கால சமூகத்திற்கே அச்சுறுத்தலாக அமையும். இதனை செய்யும் குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் கூட அந்த நோக்கத்தை கொண்டிருக்கவில்லை, ஒரு கிரியேட்டிவிட்டிக்காக செய்தது என்றாலும், வீடியோக்கள் இணையத்தில் வந்தவுடன், குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகம் (சிஎஸ்ஏஎம், சிறார் ஆபாசப் படங்கள் என்றும் அறியப்படுகிறது), குழந்தைகளை பாலியல் ரீதியாகப் பயன்படுத்த வீடியோக்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய சைபர் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.



NIMHANS இல் உள்ள சுகாதார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சேவை (SHUT) கிளினிக்கின் தலைவரான மருத்துவ உளவியல் துறையைச் சேர்ந்த மனோஜ் குமார் ஷர்மா, குழந்தைகள் திரைப்படங்கள், OTT தளங்கள் அல்லது சமூக ஊடகங்களில் பார்ப்பதை அப்படியே செய்வது இயல்பானது என்று விளக்குகிறார். “குழந்தைகள் திரைப்படங்களில் பார்க்கும் நடன அசைவுகள், உரையாடல்கள் போன்றவற்றைப் பின்பற்ற விரும்புவார்கள். அவர்களின் செயலை நிறுத்துவதற்குப் பதிலாக, பெற்றோர்கள் அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். மேலும், நம் ஊரில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நகைச்சுவை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பல கொண்டிருக்கின்றன.


குழந்தைகள் இதனை செய்வதன் மூலம் அவர்களைச் சுற்றியுள்ள பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக தங்களை கட்டமைத்துக்கொள்கிறார்கள் என்பதற்கும், வீடியோவைப் பார்க்கும் மற்றவர்கள் அதனை எப்படி பார்ப்பார்கள் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை குழந்தைகளுக்கு கற்பிப்பது அவசியம். எடுத்துக்காட்டாக, அடல்ட் கண்டெண்ட் அல்லது பெண்கள் வெறுப்பு கொண்ட பாடல் வரிகளுடன் கூடிய பிரபலமான பாடலின் நடனங்களை அப்படியே ஆடும் ஒரு குழந்தை, அதிக வியூவ்ஸ் பெறமுடிகிறது, ஆனால் சில சைபர் குற்றவாளிகள் அந்த வீடியோவைக் கண்டுபிடித்து அதை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது அதில் இழிவான, கேவலமான கருத்துகளைப் பதிவுசெய்தால், குழந்தை அந்த ரீதியில்தான் நடனம் ஆடியது என்று அர்த்தமல்ல.


Netflix திரைப்படமான Cuties இந்த வேறுபாட்டை சிறப்பாகச் எடுத்து கூறுகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருப்பதைக் கண்காணிப்பது ஒரு அம்சமாக இருந்தாலும், இணையத்தை ஆராய்வதற்கும், கேள்விகளைக் கேட்பதற்கும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடம் இருப்பதைப் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் உறுதிப்படுத்துவதும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



சமன்விதா பாலியல் கல்வி மற்றும் திறந்த தொடர்பு ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். “பாலியல் கல்வியை சிறு வயதிலிருந்தே தொடங்க வேண்டும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட சில சமயங்களில் தங்கள் உடலை நன்றாகப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தில் தங்கள் உடல் உறுப்புகளைத் தொடுகிறார்கள். இதேபோல், குழந்தைகள் நடனப் ஸ்டெப்களை தூண்டும் வகையில் அல்லது பாலியல் ரீதியாக நடனம் ஆடினால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் அது ஏன் தங்களை கவலைக்குள்ளாக்குகிறது என்பதைத் பற்றி பேசி புரியவைக்க வேண்டும், மேலும் குழந்தைகள் ஏன் அதை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் புரியவைக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.


மனோஜ் அவர்களின் குழந்தைகளின் நடனம் அல்லது பாடலுக்கு ஏற்றாற்போல உதடுகளை அசைத்தல் போன்ற வீடியோக்களை பதிவு செய்வதன் அதனை அப்போது வெளியிடாமல், குழந்தைகள் புரிந்துகொள்கிற வயதுக்கு வந்தவுடன் அவற்றைப் பதிவேற்றம் செய்து அதன் தாக்கங்களைப் புரிந்துகொண்டு மேலும் வீடியோக்கள் போடலாமா வேண்டாமா என்று அவர்களின் சம்மதத்தை பெறலாம் என்றும் அறிவுறுத்துகிறார். ஆடைகளைப் பொறுத்தவரை, குழந்தைகளுக்கு பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னையைச் சேர்ந்த உளவியலாளர் குறிப்பிடுகிறார்.



ஊ சொல்றியா வீடியோவைப் பற்றி குறிப்பிடுகையில், ஒருவேளை பெற்றோரே தங்கள் குழந்தைக்கு சேலை உடுத்தியிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். “ஆனால் இளம் பருவத்தினர் தலைமுறை இடைவெளியின் காரணமாக தங்கள் பெற்றோருடன் ஆடை விஷயத்தில் முரண்படுகிறார்கள். மீண்டும், பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரும் ஒருவரையொருவர் தங்களது கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும், பொதுவான ஒருமித்த கருத்துக்கு வருவதற்கும், உரையாடல் மட்டுமே உதவும், ”என்கிறார் சமன்விதா. ஆன்லைன் ஆதாரங்கள், சமூக ஊடகங்களில் பெற்றோர்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் மற்றும் நிபுணர்கள் பேசியது ஆகியவற்றை கருத்தில் கொண்டு செய்த ஆய்வில், பப்லிக் அக்கவுண்ட் எனப்படும் எல்லோரும் அணுக முடிந்த கணக்குகள் வைத்திருப்பதற்கு பதிலாக சமூக ஊடகங்களில் பிரைவேட் அக்கவுண்ட்டை உருவாக்கி கொள்ளலாம், அதன்மூலம் பெற்றோர்களும் குழந்தைகளும் ஒரு நடுநிலையைக் கண்டறிய முடியும் என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர்.


இது குழந்தைகள் சமூக ஊடக கணக்கை கண்காணிக்கவும், ஃபாலோ செய்பவர்களுக்கு நம்பகமான பயனர்களை மட்டுமே சேர்க்கவும் அனுமதிக்கும். நாம் விரும்பாவிட்டால் அந்த பயனரை பிளாக் செய்யவோ, அவரால் நம் பதிவுகளை காணாமல் செய்யவோ முடியும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது, ​​12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்கள் எப்போதும் அருகில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், இது குழந்தைகள் வயதுக்கு பொருந்தாத விஷயங்களை அவர்கள் பார்ப்பதையோ, கேட்பதையோ தவிர்க்க உதவும்.


வலுவான தகவல்-தொழில்நுட்ப சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள், பயிற்சி மற்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்கான பயிற்சிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் பற்றிய விரிவான தொகுதிகள் ஆகியவற்றின் அவசியத்தையும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.