Watch Video | ''பைக் ஓடுது.. படம் ஓடுமா?'' வலிமை பத்தி பேசி வம்பில் மாட்டிய சீரியல் நடிகை! இன்ஸ்டாவில் கதறல்!

தமிழ் சீரியல் நடிகையான ஸ்ரீநிதி தன்னுடைய தோழி சைத்ரா ரெட்டி வலிமை திரைப்படத்தில் நடித்திருப்பதால் அவரோடு சேர்ந்து படம் பார்க்க வந்துள்ளார்.

Continues below advertisement

அஜித்குமார் நடிப்பில் உருவான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான  'வலிமை', தமிழ்நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் வெளியாகி சாதனையை படைத்தது. இப்படம் முதல் நாளில் சுமார் 28.25 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சர்க்கார் படத்திற்கு அடுத்தபடியாக தமிழ்த் துறையில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது பெரிய படமாக உள்ளது. எச் வினோத்தின் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

Continues below advertisement

தொடர்ந்து, பல திரைவிமர்சகர்கள் வலிமை படத்தின் நீளம் அதிகமாக உள்ளதாகவும், படத்தை இன்னும் கொஞ்சம் கட் செய்து திரையிட்டு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வந்தனர். அதேபோல், அஜித் ரசிகர்கள் உள்பட பலரும் இதே கருத்தை முன்வைத்து வந்தனர். இதையடுத்து,  படக்குழு தானாக முன்வந்து படத்தின் காட்சிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழில் 12 நிமிடங்கள் குறைக்கப்படுவதாகவும், இந்தியில் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் புதிதாக கட் செய்யப்பட்ட படத்தை திரையிட இருப்பதாகவும் தெரிகிறது. 

சீரியல் நடிகை ஸ்ரீநிதி : 

தமிழ் சீரியல் நடிகையான ஸ்ரீநிதி தன்னுடைய தோழி சைத்ரா ரெட்டி வலிமை திரைப்படத்தில் நடித்திருப்பதால் அவரோடு சேர்ந்து படம் பார்க்க வந்துள்ளார். அப்பொழுது ஒரு சில யூடியூப் சேனல்களில் ஸ்ரீநிதியிடம் வலிமை படம் எப்படி இருக்கு என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ஸ்ரீநிதி நடிகர் அஜித் இந்த படத்தில் க்யூட்டாக இருக்கிறார். ஆனால், இந்த படம் பொறுமை வேண்டும். படம் ஓடுவதைவிட பைக்தான் அதிகமாக ஓடுகிறது என்று தெரிவித்துள்ளார். 

இதைபார்த்து, கோவமடைந்த அஜித் ரசிகர்கள் நீங்க எப்படி படத்தை பார்த்து அப்படி சொல்லலாம் என்று சமூக வலைதளங்களில் ஸ்ரீநிதியை ட்ரோல் செய்தும், அவரது இன்ஸ்டா பக்கத்தில் மோசமாகவும் பதிவிட்டும் வந்துள்ளனர். 

கண்கலங்கிய ஸ்ரீநிதி : 

ஸ்ரீநிதியின் இன்ஸ்டா பக்கத்தில் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து தவறான வார்த்தைகளை மெசேஜ் செய்து வருவதால் பொறுமையிழந்த ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து கண்கலங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு சினிமா ரசிகராக நான் படம் பற்றி கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. என் தோழி இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடனே வலிமை படத்தை பார்க்க வந்தேன். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் எனது கருத்தை கூறினேன். ஆனால், அதற்காக தனிபட்ட முறையில் என்னை தாக்கி பேசாதீர்கள். இதற்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கண்கலங்கி பேசியுள்ளார். 

ஸ்ரீநிதி பேசிய வீடியோக்கு கீழ் சிலர் அவருக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் எதிராகவும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement