உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டிலுள்ள சில விமான நிலையங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்தப் போர் காரணமாக சிவில் விமான போக்குவரத்திற்கு உக்ரைன் நாடு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அங்கு தங்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் ரூமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை அனுப்பியுள்ளது. 


 


இந்நிலையில் இதுபோன்ற ஆபத்தான நேரங்களில் ஏன் ஏர் இந்தியா விமானத்தை அரசு பயன்படுத்துகிறது? அதற்கு உள்ள காரணம் என்ன?


 


இந்திய அரசு எப்போதும் பல்வேறு பதட்டமான சூழல்களில் ஏர் இந்தியா விமானத்தை பயன்படுத்தி இந்தியர்களை மீட்டுள்ளது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற தாக்குதலின் போது சுமார் 60 நாட்களில் 1.70 லட்சம் இந்தியர்களை பத்திரமாக மீட்டது. இதில் ஏர் இந்திய முக்கிய பங்கு வகித்தது. உலகளிலேயே இவ்வளவு பெரியளவில் ஒருநாட்டிலிருந்து மீட்ட பெருமை இந்தியாவிற்கு அப்போது கிடைத்தது. அதன்பின்னர் ஏமன், லிப்யா, லெபனான் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து இந்தியர்களை மீட்டுள்ளது. 




கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வந்தே பார்த் திட்டம் மூலம் ஏர் இந்திய விமானங்கள் சீனாவின் வூஹான் பகுதி உள்பட பல இடங்களிலிருந்து இந்தியர்களை நாட்டிற்கு திரும்பி கொண்டுவந்தது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஏர் இந்தியா விமானம் உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியர்களை மீட்டு வர சென்றுள்ளது. முதல் விமானத்தில் 242 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். 


 


ஏன் ஏர் இந்தியா விமானம்?


இந்த இக்கட்டான சூழலில் இந்திய அரசு ஏர் இந்தியா விமானத்தை பயன்படுத்துகிறது. ஏனென்றால் இதுபோன்ற நேரங்களில் மிகப்பெரிய விமானத்தை பயன்படுத்தி குறுகிய காலத்திற்குள் அழைத்து வர வேண்டும். அதற்கு ஏர் இந்தியாவிடம் உள்ள பெரிய விமானங்கள் மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது. அத்துடன் ஏர் இந்திய விமானிகள் தங்களுடைய அனுபவத்தின் குறுகிய நேரத்தில் சிறப்பாக விமானத்தை பாதுகாப்பாக இயக்கும் திறன் பெற்றவர்கள். ஆகவே அவர்களை இந்திய அரசு எப்போதும் நம்பியுள்ளது. தற்போது ஏர் இந்தியா டாட்டாவிடம் சென்று இருந்தாலும் இந்திய அரசு மீண்டும் தன்னுடைய மீட்பு பணிக்கு ஏர் இந்தியாவையே பயன்படுத்தியுள்ளது. அவசர காலத்தில் கோரப்பட்ட உதவியை மறுப்பு தெரிவிக்காமல் செய்து கொடுத்துள்ளது ஏர் இந்தியா. அதன்பின்னணியில் இருந்தது டாடா. 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண