ஆரோக்கியமான வாழ்வு என்பதுதான் ஆயுளின் நீட்சி . எனவே உங்களது வாழ்க்கை முறையில் சில நலன் சார்ந்த உணவு பழக்கங்களை பின்பற்றுங்கள். அத்துடன் கீழே நாங்கள் பரிந்துரைத்துள்ள சில இயற்கை ஜூஸினையும் ட்ரை செய்து பாருங்கள்
செலரி ஜூஸ் :
மருத்துவ உலகில் இதனை மிராக்கிள் ஜூஸ் என்றுதான் அழைக்கின்றனர். இது தற்போதைய நச்சு கலந்த வாழ்க்கையில் உங்களது உடலை சுத்தப்படுத்தும் நச்சு நீக்கியாக செயல்படும். இது தண்ணீரை போன்றே கலோரிகள் அற்றது எனவே உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலையும் சுத்தம் செய்கிறது. இந்த சாற்றினை காலை எழுந்த உடன் 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். அல்லது உணவு எடுத்துக்கொண்ட பிறகு சிறிது கால இடைவெளியுடனும் பருகலாம்.
பீட்ரூட் ஜூஸ் :
பீட்ரூட் காய்கறிகளிலேயே கவரும் நிறத்தை கொண்ட ஒரு கிழங்கு வகை. பீட்ரூட் சாற்றினை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பீட்ரூட்டும் கல்லீரல் சுத்ததில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும் பீடைன் என்னும் சத்தும் உள்ளது. மேலும் முகம் பொலிவாக இருக்க பீட்ரூட் சாறு பரிந்துரைக்கப்படுகிறது.
தர்பூசணி ஜூஸ் :
தர்பூசணி என்பது உடலுக்கு மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய பழம். இதில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகமாக உள்ளது. உடலுக்கு தேவையான நீறேற்றத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்ட இந்த பழம், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது. ஒரு கப்பில் 70 கலோரிகள் இருக்கும் . அதனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தவிர்த்து விடுவது நல்லது. தர்பூசணி விதைகளோடு சேர்ந்து சாப்பிடுவது கூடுதல் நன்மை தரும்.
க்ரீன் ஜூஸ் :
க்ரீன் ஜூஸ் பொதுவாக காய்கறி மற்றும் பழங்களின் மிக்ஸாக இருக்கும் அல்லது வெறு காய்கறிகளாகவும் எடுத்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ்/கீரை, வோக்கோசு, ஆப்பிள், எலுமிச்சை, வெள்ளரி மற்றும் செலரி இவற்றை ஒன்றாக கலந்த சாற்றினை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளாம். ஆரம்பத்தில் இதனை பருகுவதில் சிக்கல் ஏற்படலாம். அதனால் பிடித்த காய்கறிகளுடன் இருந்து உங்கள் டயட்டை தொடங்குங்கள் , ஒரு முறை இதற்கு பழகிவிட்டீர்கள் என்றால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். உடல் சுறு சுறுப்புடன் இருக்கும், ஆண்டி- ஏஜிங்காக செயல்படும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான பிரச்சனைகளும் சரியாகும்.
ஆரஞ்சு கேரட் மஞ்சள் ஜூஸ்:
ஒரு சுவையான மற்றும் ஆரோக்யமான ஜூஸ் வேண்டும் என்றால் மஞ்சளுடன் கேரட் மற்றும் ஆரஞ்ச் ஜூஸினை சாப்பிடுங்கள் . உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஜூஸில் சர்க்கைரை அளவு அதிகம் என்பதை பிரச்சனை இருப்பவர்கள் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.
எலுமிச்சையும் இஞ்சியும் :
இந்த காம்போ உங்களின் நாட்களை சிறப்பாக தொடங்க உதவும். RAW-ஆக இந்த பானத்தை பருக பிடிக்காதவர்கள் டீயுடன் சேர்த்து பருகுங்கள். சிறந்த நோய் எதிர்ப்பு பானமாக செயல்படும் . அதோடு அழற்சிக்கு எதிராகவும் , செரிமாண பிரச்சனைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது.