மலச் சிக்கல் என்பது அனைவரும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பிரச்சனையை சந்தித்து இருப்பார்கள். சிலர் அன்றாடம் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். வாரத்தில் மூன்று நாட்களுக்கு மலம் வெளியேற்றுபவர்கள் தீவிர மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள். மலத்தை கடினமாக வெளியேற்றுவது, வலி, எரிச்சல், உடன் மலத்தை வெளியேற்றுவது இவை எல்லாம் தீவிர மலச்சிக்கல் பிரச்சனையில் அறிகுறிகள்.
இதற்கு சில உணவு பரிந்துரைகளை நவோமி அகர்வால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிக நார்சத்து மிக்க உணவுகள், மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். நார்சத்து உணவில் சேர்த்து கொள்ளும் போது பெருங்குடல் இயக்கத்தை துரித படுத்தும். அதனால், மலம் வெளியேறுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
- உளர் திராட்சை - இதில் சர்பிடோல் நிறைந்து இருக்கிறது. இது இயற்கையில் ஒரு பழத்தில் இருக்கும் சர்க்கரை ஆகும். இதை மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும் இதில் நார்சத்து நிறைந்து இருக்கிறது. அதனால் அன்றாட உணவில் உளர் திராட்சை சேர்த்து கொள்ளுங்கள்.
குறிப்பு - அப்டியே உலர்ந்த நிலையில் எடுத்து கொள்ளலாம். அல்லது, 10 திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம்.
- ஆப்பிள் - இதில் பிரக்டோஸ் எனும் சர்க்கரை இருக்கிறது. இதில் தண்ணீர் சத்து நிறைந்து இருக்கிறது. மேலும், பெருங்குடல் இயக்கத்தை அதிக படுத்தி மலத்தை வெளியேற்றுகிறது. ஆப்பிள் தோலில் நார்சத்து நிறைந்து இருப்பதால், தோல் நீக்காமல் அப்டியே தினம் ஒரு பழத்தை எடுத்து கொள்ளலாம்.
3. அத்தி பழம் - அத்திபழம் உலர வைத்து எடுத்து கொள்ளலாம். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி 6 நிறைந்து இருக்கிறது. இது மலசிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வாக அமையும். இது எளிமையாக செரிமானம் ஆக கூடியது. நார்சத்து நிறைந்த ஒரு உலர்பழம். அத்தி பழத்தை இரவு, தண்ணீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சேர்த்து கொள்ளலாம்.
4. கோதுமை தவிடு - கோதுமை தவிடு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். கோதுமை ரவை, உடன் காய்கறிகள் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.
5. ஆளி விதை - ஆளிவிதை இரண்டு வகையான நார்ச்சத்து இருக்கிறது. தண்ணீரில் கரைய கூடிய நார்சத்து மற்றும் தண்ணீரில் கரையாத நார்சத்து இரண்டும் இருக்கிறது. இது ஒரு ஸ்பூன் அளவிற்கு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது செரிமானத்தை அதிக படுத்தும்.
இவை எல்லாம் ஊட்டச்சத்து நிபுணர் அவர்கள் பரிந்துரை செய்தது.
மேலும் வாழைப்பழம், மலசிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். சாதரணமாக அனைவர்க்கும் கிடைக்கும்.தினம் ஒரு பழத்தை இரவு எடுத்து கொள்வது நல்லது.