மனஅழுத்தம், தூக்கமின்மை காரணத்தால் கண்ணிற்கு கீழே கருவளையம் வருவது பொதுவானது. இதில் 3 விதம் இருப்பதால் தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் கிரண் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது போன்ற கருவளையம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. கருவளையம் வருவதற்கு மனஅழுத்தம், தூக்கமின்மை, வேலை பளு, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் இருத்தல், ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் இருப்பது, மரபணு காரணமாக இருத்தல், வயது காரணமாகவும் கண்ணிற்கு கீழே கருவளையம் வரும்.
கருவளையம் மூன்று வைகைகளாக இருக்கிறது.
- கருப்பு நிறமிகளாக இருத்தல் - கண்ணிற்கு கீழே கருவளையம் பிரவுன் நிறத்தில், சருமம்அடர் நிறமாக இருக்கும். இது ஒவ்வாமை , வீக்கம், சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதால், கண்ணை அடிக்கடி தேய்த்தல் , டெர்மடிடிஸ் காரணமாக கருப்பு நிறமிகளாக பத்து போன்று இருக்கும்.
2.இரத்த ஓட்டம் - போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல், நீலம் , ஊதா, பிங்க் நிறத்தில் இருக்கும். போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கும். சிலர்க்கு வீக்கத்துடனும், வீக்கம் இல்லாமல் நிறம் மாறி இருக்கும். போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பது, ஆல்கஹால் எடுத்து கொள்வது, புகை பிடித்தல், தூக்கமின்மை, நீர் சத்து குறைபாடு, அளவுக்கு அதிகமாக உப்பு, காரம் உணவில் சேர்த்து கொள்வது, கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் அதிகம் பார்த்தல், போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கும்.
3. வடிவம் - சிலருக்கு கொழுப்பு குறைந்தாலும், உடல் எடை குறைந்தாலும், இது போன்று கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கும். போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் வரும்.
கருவளையம் வருவதற்கு சரியான காரணம் தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றார் போல் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். அனைவர்க்கும் கருவளையம் வரும். ஒவ்வொருவருக்கு பல்வேறு காரணத்தால் வரும். முறையான மருத்துவ சிகிச்சைகள் எடுத்து கொள்வதால் கருவளையம் ஈசியாக குணமாகும்.