பிரேக் அப் என்பது கடக்க கடினமான ஒரு கால சூழல். நவீன உலகின் காதல் என்பது பல பரிணாம வளர்ச்சிக்கு பின் எவ்வளவோ முன்னேற்றங்களை அடைந்துள்ளது. எல்லாவற்றையும் போலவே இதிலும் நல்லதும் கெட்டதும் இருந்தாலும், நடைமுறை சூழலுக்கு ஏற்ப, அப்டேட்டிற்கு ஏற்ப நம்மை நாம் தகவமைத்து வாழ்ந்துதான் ஆக வேண்டிய சூழல் முன்னெப்போதும் இருந்தது போல இப்போதும் உண்டு. ஆகவே அந்தக்கால காதல் தான் சிறந்தது என்று வருபவர்களை பூமர் என்று புறந்தள்ளும் 90ஸ் கிட்ஸும், 2கே கிட்ஸ்-இடம் தாங்களே பூமர் என்று பெயர் வாங்கித்தான் வருகின்றனர். எனவே காதல் குறித்த பார்வையில் கால சூழல் எல்லாம் தாண்டி பிரேக் அப் என்பது எந்த காலம் ஆனாலும் வலிக்கும் என்பதே நிதர்சனம்.


பிரேக் அப்பிற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், மற்றவர் மீது வெறுப்பு இருந்தாலும், கூட இருந்த காலங்கள் என்பது போன பின்பு பெரும் வெற்றிடத்தை, வலியை உண்டு செய்யும். ஒன்றாக சேர்ந்து பழகிய நெருங்கிய ஒருவர் இனி வாழ்வில் இல்லை என்னும் உண்மை பெரும் வலியை உண்டு செய்யும். இதனை தாண்டி வர பலர் பல வழிகளை பயன்படுத்துவார்கள். அதில் பெரும்பாலோனோர் சிக்கும் வழி பழைய காதலி அல்லது காதலன் தற்போது எப்படி இருக்கிறார் என்று அறிந்து கொள்வது.


தற்காலத்தில் சமூக வலைதளங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், அதற்கான வாய்ப்பு பலருக்கும் மேலும் எளிதாக கிடைத்து விடுவதால். அடிக்கடி முன்னாள் காதலியின்/காதலனின் சமூக வலைதள பக்கங்களை சென்று பார்ப்பது பலருக்கும் பழக்கமாக உள்ளது. அது அவர்களுக்கு ஏதோ ஒரு வெற்றிடத்தை நிறப்புவதாகவோ, வலியை குறைப்பதாகவோ தெரியலாம். ஆனால் அப்படி செய்வது உங்கள் வலியை மென்மேலும் பல நாட்களுக்கு நீடிக்கதான் செய்யும், மேலும் அந்த பாதிப்பில் இருந்து நகர்ந்து வருவதையும் தாமதப்படுத்துகிறது.


கடந்த கால உறவை விட்டுவிட சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்கள் முன்னாள் காதலர்/காதலியின் சமூக ஊடக சுயவிவரங்களைத் தொடர்ந்து சரிபார்க்கிறீர்கள் என்றால், உங்கள் உணர்வுகளைச் சமாளிக்க ஆரோக்கியமான மற்றும் அதிக பயனுள்ள வழிகள் உள்ளன என்பதை அறிந்து கொள்வது அவசியம். மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சில சிறந்த உத்திகள் இங்கே.



1.முதலில் அன்ஃபாலோ செய்யுங்கள்


முன்னேறுவதற்கான முதல் படி, உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து உங்கள் 'எக்ஸ்'ஐ அகற்றுவது. இது அவர்களின் இடுகைகள் மற்றும் புகைப்படங்களைப் பார்ப்பதைத் தடுக்கும். 



  1. எல்லைகளை அமைத்துக்கொள்ளுங்கள்


சமூக ஊடகங்களுக்கு வரும்போது உங்களுக்கென எல்லைகளை நிர்ணயிப்பது முக்கியம். ஒவ்வொரு நாளும் இணைய பயன்பாடுகளில் செலவிட குறிப்பிட்ட நேரத்தைத் தீர்மானித்து, அதனை பின்பற்றுங்கள். அதில் உங்கள் 'எக்ஸ்' இன் ப்ரொஃபைலை சரிபார்க்க மாட்டேன் என்று நமக்கு நாமே ஒரு விதியை உருவாக்க வேண்டும்.


தொடர்புடைய செய்திகள்: Nawazuddin Siddiqui: “மகளுக்கு பாலியல் தொல்லை தந்த மேலாளரை நம்புகிறீர்கள்” - மீண்டும் புயலை கிளப்பிய நவாசுதீன் முன்னாள் மனைவி!



  1. சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்


உங்கள் முன்னாள் வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பொழுதுபோக்குகளைப் பின்பற்றுங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள் அல்லது சில புதிய செயல்களில் ஈடுபடுங்கள். 



  1. ஆதரவைத் தேடுங்கள்


இந்த நேரத்தில் ஒரு ஆதரவு அமைப்பு இருப்பது முக்கியம். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி நண்பர்கள், குடும்பத்தினர் பேசுங்கள். இந்த கடினமான காலகட்டத்தில் அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்குவாரகள்.




  1. சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுங்கள்


சமூக ஊடகங்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாக உணர்ந்தால், உங்கள் முன்னாள் நபரை பின்தொடர்வதற்கான தூண்டுதலை உங்களால் எதிர்க்க முடியாது என்றால், சமூக ஊடகங்களில் இருந்து முற்றிலும் ஓய்வு எடுக்கலாம். இது உங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தவும், உங்கள் முன்னாள் நபரின் நிலையான நினைவூட்டல்களில் இருந்து ஓய்வு பெறவும் உதவும்.



  1. நீங்கள் பிரிந்ததற்கான காரணங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்


பிரிந்ததற்கான காரணங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும், அதனை மறந்துவிடக் கூடாது. பிரிந்திருக்க வேண்டாமோ என்று தோன்றவைக்கும் எண்ணங்கள் வரவிடாமல் தடுக்கும். இது உங்கள் உறவில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்னோக்கி நகர்த்தவும், சிந்திக்கவும் உதவும்.



  1. உங்களிடம் நீங்களே அன்பாக இருங்கள்


இந்த நேரத்தில் உங்கள் மீது நீங்களே அன்பாக இருப்பது முக்கியம். உறவின் முடிவை துக்கப்படுத்தவும், குணமடைய தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளவும் உங்களை அனுமதிக்கவும். குணமடைய நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் வலியை உணருவது குறித்த அச்சம் வேண்டாம், வலி இயல்புதான். பிரிவின் வலியை உணராத அளவுக்கு நீங்கள் 'வலிமையானவர்' என்று பாசாங்கு செய்ய வேண்டிய எந்த அவசியமுமில்லை.



  1. நன்றியுணர்வு பயிற்சி


நீங்கள் இழந்தவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்களிடம் உள்ளவற்றில் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு நாளும் நன்றியுணர்வைக் கடைப்பிடிக்கவும், உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களைப் பாராட்டவும் நேரம் ஒதுக்குங்கள். இது உங்கள் இலக்கை மாற்றவும், எதிர்காலத்தைப் பற்றி மேலும் நேர்மறையாக உணரவும் உதவும்.


மேலே குறிப்பிட்டுள்ள இந்த வழிகளை முயற்சிக்கவும், காலப்போக்கில், உங்கள் பிரிவிலிருந்து நீங்கள் முன்னேறலாம் மற்றும் குணமடையலாம். வாழ்க்கை இன்னும் பல அற்புதங்களை ஒளித்து வைத்து காத்திருக்கலாம்!