இந்தியாவில் பார்த்தே ஆக வேண்டிய ஐந்து கோயில்கள் குறித்து அரிய தகவல்களைத் தான் இதில் பார்க்கவுள்ளோம். இந்தியா என்றால் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட நாடு என்பதே வெளிநாட்டவர் அறிந்துவைத்திருக்கும் தகவல். நம் நாட்டில் கோயில்களுக்கு பஞ்சமில்லை. தெருக்கு ஒரு கோயில் பார்க்கலாம். ஆனால் இப்படியும் ஒரு கோயிலா என வியக்க வைக்கும் கோயில்களும் ஏராளமாக இருக்கின்றன. அப்படியான கோயில்களில் சிலவற்றைப் பற்றியே நாம் பார்க்கப்போகிறோம்.


கார்னி மாதா கோயில்:


ராஜஸ்தானின் பிகானரில் உள்ளது கார்னி மாதா கோயில். இந்தக் கோயிலை எலிகளின் கோயில் என்றும் சொல்கிறோம். பக்தர்கள் எலிகளைப் போற்றி வணங்குகின்றனர். அவற்றிற்கு உணவு படைக்கின்றனர். அந்தக் கோயிலில் 20,000 எலிகள் இருக்கின்றன. அந்தக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் எலிகளிடம் ஆசிர்வாதம் பெறவே செல்கின்றனர்.


புல்லட் பாபா கோயில்


பெயரே சும்மா அதிர வைக்குதே என்ற ஸ்டைலில் உள்ளதா? புல்லட் பாபா கோயில். ஆம் இதுவும் ராஜஸ்தானில் தான் உள்ளது. இந்தக் கோயிலில் கடவுளின் சிலையே இல்லை. மாறாக ஒரு புல்லட் மட்டும் இருக்கிறது. அதுவும் ராயல் என்ஃபீல்டு புல்லட். இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. ஒரு நாள் ஒரு நபர் புல்லட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த புல்லட் விபத்துக்குள்ளானது. அதில் சென்ற அந்த நபர் இறந்துவிட்டார். உடனே போலீசார் உடலை அப்புறப்படுத்திவிட்டு புல்லட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால் மறுநாள் காலையில் புல்லட் அங்கில்லை. புல்லட் மறைந்துவிட்டது. அதை போலீஸார் தேட. எங்கு விபத்து நிகழ்ந்ததோ அங்கேயே அந்த புல்லட் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கிராமவாசிகள் அந்த பைக்கில் சென்ற நபரின் ஆத்மா இருப்பதாக நம்பினர். அவரை புல்லட் பாபாவாக்கி அங்கே ஒரு கோயிலும் எழுப்பினர்.


கால பைரவர் கோயில்:


உஜ்ஜய்ன் நகரில் உள்ளது கால பைரவர் கோயில். இந்தக் கோயிலில் உள்ள கால பைரவருக்கு பூக்கள், இனிப்புகள் தாண்டி சாராயமும் படைக்கின்றனர் மக்கள். இதற்காக கோயிலின் வெளியேவே சாராயக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஷாஹித் பாபா நிஹல் சிங் குருத்வாரா:


இதுவரை பார்த்த கோயில்களில் இது இன்னமும் சுவாரஸ்யமானது. இது ஜலந்தரில் உள்ளது. இந்தக் கோயிலில் பக்தர்கள் பொம்மை ப்ளேன்கள் வைத்து பக்தர்கள் வேண்டுவர். எதற்குத் தெரியுமா? அங்கே விமான பொம்மைவைத்து வேண்டினால் வெளிநாட்டுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.


இந்தியா எத்தனை கலாச்சாரங்கள், எத்தனை விந்தைகள் என்று படிக்கவே வியப்பாக உள்ளதல்லவா?