தாம்பத்ய உறவு என்பது தம்பதிகளுக்கு இடையே மேலும் அன்பை அதிகரிக்கும் ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த பந்தத்தால் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவரின் உடல்களிலும் சில முக்கியமான நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த உறவில் ஈடுபடும் போது இருவரின் உடலிலும் நல்ல வகையான உணர்வை தரும் சுரபிகள் சுரக்கும் என்பதால் அது அவர்களுக்கு மனநிறைவை தரும். அத்துடன் தாம்பத்ய வாழ்வு சிறப்பாக உள்ள தம்பதிக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய சார்ந்த கோளாறுகள், போன்ற நோய்கள் வருவது சற்று குறையும் என்று ஒரு மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் செக்ஸ் உறவில் சில ஆண்களுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
இதய பிரச்னை வரும் வாய்ப்பு:
ஆண்கள் சிலருக்கு தாம்பத்ய உறவு பிரச்னை பொதுவாக விரைப்பு தன்மை மற்றும் விந்து வெளியேறுதல் உள்ளிட்டவை ஏற்படும். அப்படி பிரச்னை இருக்கும் ஆண்களுக்கு ஒருவேளை இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய் மற்றும் ஹார்மோன் பிரச்னை ஆகியவை இருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மன பிரச்னை:
ஆண்களின் மன பிரச்னை கூட அவர்களின் தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்பட ஒரு காரணமாக உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்டவை ஆண்களின் உடலுறவில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் அமையும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மருந்துகள் எடுப்பது:
ஆண்களில் சிலர் எதாவது வேறு ஒரு பாதிப்பிற்கு எடுக்கும் மருந்துகள் அவர்களுடைய தாம்பத்ய உறவில் சில பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக மன நலம் தொடர்பான பிரச்னைகளில் அதிகமாக மருந்துகள் எடுக்கின்றவர்களுக்கு சில தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வயது காரணமாக வரும் குறைபாடு:
மேலும் ஒரு சில ஆண்களுக்கு வயது அதிகரிக்கும் போது அவர்களுடைய உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது சில பிரச்னைகள் ஏற்படும். அதுவும் அவர்களுடைய தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்பட ஒரு முக்கியமான காரணம் என்று கூறுகின்றனர்.
ஆகவே ஆண்களின் உடல்நலம் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய தாம்பத்ய உறவில் பிரச்னை வரும் நிலை குறையும் என்று கூறப்படுகிறது. அதாவது நம்முடைய உடல்நிலை சீராக இருக்கும் பட்சத்தில் உடலுறவில் எந்தவித பிரச்னையும் வர வாய்ப்பு குறைவு என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக ஆண்கள் சரியான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: சீரகத்தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.!