தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,591இல் இருந்து 1,658 ஆக அதிகரித்துள்ளது.இதன்மூலம் தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் 1600ஐக் கடந்துள்ளது. சென்னையில் மேலும் 226 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 29 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,246 ஆக உயர்ந்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 38 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 46 ஆயிரத்து 880 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 226 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 226 ஆக அதிகரித்துள்ளது.  கோயம்பத்தூரில் 224 பேரும், ஈரோட்டில் 130 பேரும், தஞ்சாவூரில் 119 பேரும், செங்கல்பட்டில் 126 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


 






கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,246 ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனைகளில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் ஏதும் இல்லாத ஒருவரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 98,240 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8440 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் கோவையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,636 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,542 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,85,244 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மாநிலம் முழுவதும் 40985 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24146  ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8184 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 


பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.