உடல் எடை அதிகமாகும் போது தெரியாம சீக்கிரம் தான் எடை அதிகமாகுது. ஆனால் எடை குறையும் போது படாத பாடு பட வேண்டியதா இருக்கு. இப்படி நினைக்கத்தவர்கள் யாரவது இருக்குறீர்களா என்ன? பிடித்ததை சாப்பிட்டு சோம்பேறியாக இருந்தாலே, தினம் கிராம் கிராமாக எடை கூடும். ஆனால் எடை குறையும் போது , அதே சீரான வேகத்தில் குறைவதில்லை. தொடர்ந்து டயட், உடற்பயிற்சி னு செய்துகிட்டு இருந்தாலும், முதல் மாதம் எடை குறைந்தது போல், இரண்டாவது மாதம் எடை குறைவதில்லை.
எத்தனையோ டயட் இருக்கு.... எண்ணற்ற உடற்பயிற்சிகள் இருக்கு . எத்தனை இருந்தாலும், எதுவாக இருந்தாலும், தொடர்ந்து செய்தால் மட்டுமே உடல் எடை குறையும். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தினால் எடை அதிகரித்து இருக்கும். ஆனால் அனைவர்க்கும் தேவையான ஊட்டச்சத்துகள் ஒரே மாதிரியானவை. கார்போஹைட்ரெட், புரதம், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் ஆகியவை முக்கியம். இவை அனைத்தும் சேர்ந்த சரிவிகித உணவை ஒரு வாரத்திற்கு பரிந்துரை செய்யலாம். ஊட்டச்சத்துகள் அடிப்படையில் பிரிக்கப்பட்ட டயட் இதோ
திங்கள் கிழமை
காலை - புதினா சட்னி + இட்லி/தோசை
மதியம் - சப்பாத்தி + தானியம் + காய்கறி
இரவு - காய்கறி + சிக்கன் (வேகவைத்தது ) +கோதுமை ரொட்டி
செவ்வாய் கிழமை
காலை - காய்கள் சேர்த்த அப்பம் + பால் +முட்டை
மதியம் - சிவப்பரிசி சாதம் + கொண்டை கடலை குருமா
இரவு - முளைகட்டிய பாசிப்பயறு + கிச்சடி
புதன் கிழமை
காலை - ஊத்தப்பம் +காய்கறி சாலட்
மதியம் - சிக்கன்/மீன் (வேகவைத்தது)+காய்கறி கலவை
இரவு - பழுப்பு அரிசி சாதம் + காய்கறி குழம்பு
வியாழ கிழமை
காலை - பழங்கள் (1கப்) +உலர்பழங்கள் +பால்
மதியம் - பழுப்பு அரிசி +காய்கறி கலவை+கொண்டைக்கடலை குருமா
இரவு - சப்பாத்தி +காய்கறி கலவை
வெள்ளி கிழமை
காலை - காய்கறி கலவை + கம்பு சாதம் + பால்
மதியம் - பழுப்பு அரிசி சாதம் + காய்கறி கலவை+ தயிர்
இரவு - உருளைக்கிழங்கு உடன் காய்கறி கலவை வேகவைத்தது + சிக்கன் (வேகவைத்தது )
சனிக்கிழமை
காலை - பருப்பு கலந்த காய்கறி கூட்டுடன் சப்பாத்தி +பழங்கள்
மதியம் - இறைச்சி மற்றும் பழங்கள் அல்லது காய்கறி சாலட்
இரவு - முளைக்கட்டிய பயிறு சாலடோடு கிச்சடி
ஞாயிறு கிழமை
காலை - ஒரு மாம்பழம் மற்றும் ஒரு கிளாஸ் பால்
மதியம் - முழு தானிய ரொட்டியுடன் காய்கறி சூப்
இரவு - மசாலா சேர்க்கப்பட்ட காய்கறி கறி அல்லது அசைவ உணவு