நடிகர் ஷில்பா ஷெட்டி  ஒரு தேர்ந்த உடற்பயிற்சி ஆர்வலர் என்பது ஊர் அறிந்ததே.அது தொடர்பாக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடுவதும் வாடிக்கை. தனது வழக்கமான வொர்க்-அவுட்டை விட்டுவிட்டு அவர் அவ்வப்போது வேறு வடிவங்களிலான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுப்பார்.





அந்த வகையில் அண்மையில் அவர் பெல்லி டான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்,. பெல்லி டான்ஸ் என்பது எப்படி மைய தசைகளை வலுப்படுத்த உதவுகிறது என்பதை அந்த வீடியோவில் படிப்படியாக விளக்கினார். அதன் கேப்ஷனில் பெல்லி டான்ஸின் பலன்கள் குறித்து விலாவரியாக விவரித்து இருந்தார்..
ஆனால் பெல்லி டான்ஸ் எல்லாருக்கும் சாத்தியமா என்கிற கேள்விக்குக் கூட அவர் விளக்கம் அளித்திருந்தார். அதில், ”ஒரு காலை நேராக வைத்து பாதத்தை தரையில் படும்படி வைத்து, மற்றொரு காலின் குதிகால் முழங்காலை வளைக்காமல் உயரமாக உயர்த்தி, பின் இடுப்பை மெல்லமாகச் சுழற்றவும்.இதையே மற்றொரு காலைக் கொண்டு செய்யவும் எனக் குறிப்பிட்டிருந்தார். உதாரணத்துக்கு இன்ஃபினிட்டி வடிவத்தை மனதில் கொள்ளச் சொல்லியிருந்தார்.






 


பெல்லி நடனத்தின் சிக்கலான இயக்கங்கள் உள் தசைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கணிசமாக உதவுகின்றன.


உடலமைப்பு மற்றும் தசை மெருகேருதலின் காரணமாக தன்னம்பிக்கையும் ஒருவகையில் அதிகரிக்கும்.


மற்ற நடன பாணிகளைப் போலவே, பெல்லி நடனம் உங்கள் உடலை எண்டோர்பின்கள், டோபமைன் அல்லது பிற "ஃபீல் குட்" ஹார்மோன்களை வெளியிட உதவுகிறது.


யோகா மற்றும் பைலேட்ஸ், இவை இரண்டும் உடலின் முதுகெலும்பு, முழங்கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் வேலை செய்கின்றன,இவற்றை பெல்லி நடனத்துடன் ஒப்பிடுகையில் அவை ஒரே மாதிரியான அசைவுகள் மற்றும் தோரணைகளைக் கொண்டுள்ளன.


பெல்லி நடனத்துக்கு என்று தேர்வு செய்யப்படும் பாடல்கள் நமக்கு மனதுக்கு அமைதியைத் தருபவையாக உள்ளன


பெல்லி நடனம் பொதுவாக முதுகு பிரச்சனைகளைத் தடுக்கவும், முதுகு அழுத்தத்தைப் போக்கவும் உதவும்.


இவ்வாறு அவர் தனது பதிவில் பகிர்ந்திருந்தார்.