உங்களுக்கு முன்கூட்டிய பிரசவ ஆபத்து அதிகமாக இருந்தால், கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.மேலும் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவின் போது ஏதேனும் வழக்கமான வலி ஏற்பட்டால் நிறுத்திவிட்டு உங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.


 உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடலுறவைத் தவிர்க்கவும், உடனடியாக உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகவும்.


கர்ப்பம் என்பது  கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது, ஆனால் அது சில பிரச்சினைகளில் சில குழப்பங்களையும் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது. குறிப்பாக தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கும் பெண்களுக்கு, அவர்களின் கர்ப்ப காலத்தின் போது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் வரிசையாக இருக்கும். 


அவற்றில் ஒன்று நிச்சயமாக கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது சரியா என்பது. இருப்பினும், உங்கள் குழந்தையின் பாதுகாப்புக் கவலைகள் காரணமாக உங்கள் உணர்ச்சிகளுக்கு அடிபணிவதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் முறைப்படியான ஆலோசனைகளை பெறுங்கள்.


கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்வது  பிறக்காத குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமான கர்ப்பத்தில், இது நடைபெறாது. ஒரு ஆரோக்கியமான கர்ப்பத்தின் எந்த நேரத்திலும், கணவன் மனைவி இருவரும் உடலுறவு கொள்வது  குழந்தைக்கு தீங்கு விளைவிக்காது.
இதில் மனைவியின் வயிற்றுப்புரத்தில் அழுத்தத்தை தராமல் இருப்பது ஆக முக்கியம், இதை நீங்கள் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசித்தால் அவர் சரியான உடலுறவு முறைகளை எடுத்துச் சொல்லுவார்.



கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்ற கவலையும் நிறைய கணவன் மனைவியிடையே உள்ளது. இதன்படி ஒரு ஆரோக்கியமான கர்ப்பவதி,கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதினால்  குறை பிரசவமோ  அல்லது முன்கூட்டிய குழந்தை பிறப்பதோ இருக்காது. 


இருப்பினும் சில நேரங்களில் கணவன் மனைவி இருவரும் உடலுறவு தவிர்க்க வேண்டி வரலாம். அது எத்தகையது என்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது பாலியல் ரீதியாக பரவும் நோயால் உங்களுக்கும் உங்கள் பிறக்காத குழந்தைக்கும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் உங்கள் துணைக்கு  சமீபத்தில் கண்டறியப்பட்ட STD இருந்தால், பிறப்புறுப்பு, வாய்வழி  உட்பட அனைத்து வகையான உடலுறவையும் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இதே போலவே உங்கள் துணைக்கு உங்களுடைய கர்ப்ப காலத்தில் காய்ச்சல், சளி ,காச நோய் மற்றும் நீண்ட நெடிய நோய்கள் ஏதாவது இருப்பின் இத்தகைய தருணங்களில் உங்கள் உடலுறவு தவிர்க்கலாம்.


இதே போலவே உங்கள் துணை மது அல்லது போதை வஸ்துக்களை அருந்திவிட்டு உங்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் சற்று கவனம் இன்மையினால்  கூட அவருடைய முழு எடையையும் உங்கள் வயிற்றின் மேல் அழுத்தி விட வாய்ப்புகள் அதிகம். இத்தகைய தருணங்களிலும் உடலுறவை நீங்கள் முழு முற்றாக தவிர்க்கலாம்.


மேற் சொன்ன தவிர்க்க முடியாத காரணங்களை தவிர்த்து வேறு எதற்காகவும் கர்ப்ப காலத்தில் தம்பதிகள் உடலுறவு தவிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மேற் சொன்ன காரணங்களை எல்லாம் மற்றும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டு,உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கணவன் மனைவி இருவரும் முறையான ஆலோசனையை எடுத்துக் கொண்டு, உங்கள் தாம்பத்தியத்தை தொடரலாம்.