சென்னையில் நாளை (ஆக.20) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் பராமரிப்புக் காரணமாக மாதம் ஒருமுறை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். 


நான்கு முக்கியப் பகுதிகளில் மின் தடை


”சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, தாம்பரம், போரூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பொன்னேரி ஆகிய துணை மின் நிலையங்களில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.


அண்ணாசாலை பகுதி: போர்ட் டிரஸ்ட் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, தம்பு செட்டி தெரு, அங்கப்பா நாய்க்கன் தெரு, நேஷனல் மருத்துவமனை, மண்ணடி தெரு, நாவல் குடியிருப்பு, காமராஜர் சாலை, ஜார்ஜ் டவுன் கோர்ட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.


தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு மாடம்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, குருசாமி நகர், கே. வி.ஐ.சிநகர், பழனியப்பன் நகர், வேம்புலியம்மன் கோயில் தெரு, ராதாநகர் செந்தில்நகர், ஐஸ்வரியா நகர் அருள்முருகன் தெரு. பெரியார் நகர், சூரியா அவென்யூ, போஸ்டல் நகர் மற்றும் மேற்காணும் இடங் களில்சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.


போரூர் பகுதி: செம்பரம் பாக்கம் நசரத்பேட்டை முழுவதும், வரதராஜபுரம், பெங்களூர் நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரமேல் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.


அம்பத்தூர் தொழிற்பேட்டைபகுதி: அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்குப் பகுதி, முகப்பேர் தெழிற் பேட்டை, தெற்கு நிழற் சாலை, கவரை தெரு, கல் யாணி எஸ்டேட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.


பொன்னேரி பகுதி : சிப் காட் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு. கும்மிடிப்பூண்டி சிப்காட் எஸ்.எஸ்.2 தொழிற் பேட்டை காம்பிளக்ஸ். பாப்பன்குப்பம், சிந்தலக்குப்பம் மற்றும் சித்திரராஜா கண்டிகை” என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்


Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண