புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.621 (ம்யூ), பரவலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காலப்போக்கில், சார்ஸ் கோவ் - 19 மரபணு அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களால் வைரஸில் இருந்து உருமாறிய கொரோனா வகை தோன்றுகிறது. சார்ஸ்- கோவ் 19 என்பது ஆர்என்ஏ மரபியல் பொருட்களை கொண்டது. பொதுவாக, இவற்றின் மரபியல் பொருள் விரைவாகவும் அதிகமாகவும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கும். உண்மையில், ஆர்என்ஏ மரபியல் வைரஸ்களை வகைப்படுவதுத்துவது கூடி மிகவும் கடினமாகும்.
தற்போது வரை, கவலையளிக்கக் கூடிய நான்கு கொரோனா வைரஸ் வகைகள் பரவலை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta), பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617.2- டெல்டா வகை) ஆகிய நான்கு மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ம்யூ வைரஸ் வகைகள் அதிகம் பரவக் கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இந்த ம்யூ வகை கொரோனா தொற்று முதன் முறையாக தெற்கு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நாட்டில் கண்டறியப்பட்டது. தற்போது, உலகின் 39 நாடுகளில் இதன் பரவல் காணப்படுகிறது. புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)). இது கவலையளிக்க கூடியதாக Variant of Concern (VoC). இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. கவலையளிக்கக் கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும்.
தற்போது வரை, உலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில், 0.1% க்கும் குறைவான பாதிப்புகள் மட்டுமே ம்யூ வகையை சார்ந்தது. இருந்தாலும், கொலம்பியா மற்றும் எக்குவடோர் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவரின் ரத்தத்தில் உள்ள வைரஸை எதிர்க்கும் அணுக்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நோய் எதிர்ப்பு அணுக்களை தவிர்க்கும் (neutralization capacity of convalescent & vaccine sera) திறன் கொண்டதாக ம்யூ தொற்று பரவல் உள்ளது. இருந்தாலும், இப்போதைக்கு ‘ம்யூ’ கொரோனாவின் தன்மை பற்றி யாருக்கும் தெரியாது. மேலும், சில ஆய்வுகள் அடிப்படையில் முழு விவரங்கள் தெரிய வரும் என்று அறியப்படுகிறது.