குளிர்க் காலத்தில் நம்மில் பலரும் இருமல் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்போம். இருமலில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வது எப்படி? இதோ சில டிப்ஸ்...
காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, அது இருமலில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். வேப்பரைசர், மிதமான சூட்டில் ஆவி பறக்கும் வெந்நீர்க் குளியல் ஆகியவை காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவுகிறது.
நீர்ச்சத்து அதிகம் உட்கொள்வது சளியைக் குறைக்கும் என்பதால் அவற்றை எளிதில் இருமி வெளியேற்ற முடியும். இதனால் அதிகமாக நீர்ச்சத்து உடலில் சேர்க்கப்படுமாறு, குடிநீர் குடிக்க வேண்டும்.
இருமலோடு சளி இருந்தால் அது தொண்டையின் பின்பக்கம் அதிகமாக வெளியேறும் வாய்ப்புள்ளது. நாசிக்குள் செலுத்தும் மருந்தைச் செலுத்தினால் அது நாசிப் பகுதியில் உள்ள வழியைத் திறந்து உதவும். இதன்மூலமாக, இருமலையும், சளியையும் குணப்படுத்தலாம். இவ்வாறான இருமலுக்கு இந்த சிகிச்சை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
உடலில் உள்ள ரத்தக் கசிவை நீக்கும் Decongestants என்று அழைக்கப்படும் phenylephrine, pseudoephedrine அல்லது இந்த இரு மருந்துகளின் கூட்டு ஆகியவை அனைத்து மருந்து கடைகளிலும் விற்கப்படும் இருமல் மருந்துகள். இவற்றை 6 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வழங்கக் கூடாது. மேலும், 2 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை அளிக்கும் முன், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களும், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்துகளை இருமலுக்காகப் பயன்படுத்தும் முன் தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நாசியில் மருந்து செலுத்தப்பட்ட பிறகும் இருமல் தொடர்ந்தால், அவை சைனஸ் பாதிப்பு அல்லது வேறு வகையான அலர்ஜி காரணமாக ஏற்படலாம். இதற்கு அலர்ஜி காரணமாக இருந்தால் அதனைச் சரி செய்ய அலர்ஜியைத் தூண்டாத வகையில் அதனைத் தூண்டும் பொருள்களில் இருந்து தவிர்த்துக் கொள்வதே சிறந்த சிகிச்சை. மேலும், அலர்ஜியைத் தடுப்பதற்கு anti-histamines என்ற மருந்து வகைகளையோ, நாசியில் செலுத்தப்படும் ஸ்டீராய்ட் வகையிலான ஸ்பிரே ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை அலர்ஜி ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவும்.
வறட்டு இருமலைச் சரிசெய்வதற்கு இருமல் மாத்திரைகள், candy வகையிலான மிட்டாய்கள் ஆகியவற்றை உட்கொள்ளலாம். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இவ்வகையான மிட்டாய்கள் தொண்டையில் சிக்கும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு இதனை அளிக்காமல் இருப்பது சிறந்தது.
புகைப் பிடித்தலைத் தவிர்க்க வேண்டும். மேலும், சளி, காய்ச்சல் முதலான அறிகுறிகள் தென்படும் நபர்களிடம் இருந்து தனி மனித விலக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும் இருமல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது கைகளைக் கழுவ வேண்டும்.
இவற்றைப் பின்பற்றினால் இருமலின் தொல்லையில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ளலாம்.