நமது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள எப்படி நாம் உடற்பயிற்சி செய்கிறோமோ, அதை போல நமது மைண்ட் ஃபிட்டாக இருக்க புத்தகம் படிப்பது அவசியமாம். நமது மூளையில், நியூரோ பிளாஸ்டிசிட்டி என்கிற ஒரு முக்கியமான தன்மை இருக்கிறது.
நமது மூளையில் நிறைய பாகங்கள் இருக்கின்றன. இந்தப்பாகங்களெல்லாம் நியூரான்ஸ் என்று அழைக்கப்படும் செல்களால் இணைக்கப்பட்டிருக்கிறது. மூளையில் இருக்கும் பகுதிகளை நாம் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் போது, புதுபுது இணைப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும். இதனால்தான் தொடர்ந்து செய்யும் சில வேலைகளை, சிறிது நாட்கள் விட்டுவிட்டு மீண்டும் செய்யும் போது, அதில் நமக்கு டச் விட்டுவிட்டது என்று சொல்கிறோம்.
புத்தகங்களில் இரண்டு வகை, அதில் ஒன்று சாதரண கதைகள் (புனை கதை அல்லாத) மற்றொன்று கற்பனை கதைகள் ( புனை கதை). இதில் கற்பனை கதைகளை படிக்கும் போது, நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறதாம்.
பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், முதலில் OLYMPIA ACADEMY BOOK CLUB என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அப்போது, பல கற்பனை கதைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்டவற்றைப்பற்றி பேசும் போது நிறைய ஐடியாக்கள் வருமாம். அந்த ஐடியாக்களைக் கொண்டுதான் நிறைய தியரிக்களை அவர் கண்டுபிடித்துள்ளாராம்.
நீங்கள் கற்பனைகதைகளை படிக்கும் போது, கதையில் வரும் காட்சிகளை கற்பனை செய்யும் போது, நமது மூளையில் உள்ள Occipital lob ஆக்டிவேட் ஆகும். அதே போல சில வாசனை சார்ந்த காட்சிகளை நாம் நினைக்கும் போது, நமது மூளையில் Temporal lobe ஆக்டிவேட் ஆகும். இவை ஆக்டிவேட் ஆகுவதன் மூலம் நாம் கிரியேட்டிவ் மற்றும் கற்பனை வளம் மிகுந்த மனிதராக மாற முடியும்.
இதுமட்டுமன்றி கற்பனை சார்ந்த கதைகளை நாம் படிக்கும் போது மற்றவர்களை அவர்கள் இடத்தில் இருந்து புரிந்துகொள்ளும் தன்மை அதிகரிக்கிறதாம். Temporal lobe ஆக்டிவேட் ஆகாத நபர்களுக்கோ ஈகோ அதிகரிப்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.
தகவல் உதவி: Let's Make Engineering Simple