நடிகை சமந்தா ரூத் தனது கணவர் நாக சைதன்யாவுடன் மணமுறிவு ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளை இட்டு வருகிறார். அந்த வரிசையில் அவரது அண்மைய பகிர்வு வைரலாகி வருகிறது.




ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் சுயசரிதைப் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசியுள்ள அவர், “கடந்த முப்பது ஆண்டுகளில், பேரும் தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து மற்றும் மரணத்தை எதிர்கொண்டோம். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது, எனது பணம் பறிக்கப்பட்டது, எனது ப்ரைவசி ஆக்கிரமிக்கப்பட்டது, எனது குடும்பம் சிதைந்தது - ஆனாலும் ஒவ்வொரு நாளும் நான் அந்த காண்க்ரீட் கலந்த செங்கல்லை எனது வாழ்க்கையில் எழுப்பிக் கொண்டிருந்தேன். நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை. உங்கள் வாழ்வில் எப்படி மாற்றம் ஏற்பட்டாலும் பரவாயில்லை உங்கள் முன்னாள் மற்றொரு செங்கல் எடுத்து வைக்கப்படக் காத்திருக்கிறது. ஒரே கேள்வி, நீ எழுந்து அந்தச் செங்கல்லை வைக்கப் போகிறீர்களா அல்லது அப்படியே கிடக்கப் போகிறீர்களா என்பதுதான்.”வில் புத்தகத்தில் வரும் இந்த வாசகத்தைப் பகிர்ந்துள்ளார் சமந்தா.


புத்தகம் இடம்பெறும் வாசகத்தைப் பகிர்ந்து கருத்து கூறியுள்ள சமந்தா, "கடினமாக உழைக்கவும், உங்கள் பின்னடைவுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும், சுயமாக சிந்திக்கவும், உங்களை புதுப்பித்துக் கொள்ளவும், ஒருபோதும் கைவிடாதீர்கள்.நகைச்சுவை உணர்வு எப்போதும் உங்களுக்கு உதவுகிறது. என்ன ஒரு அழகான மற்றும் கவர்ச்சிகரமான புத்தகம், வில்"


 






சமந்தா அண்மையில் தனது சாகுந்தலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.