பலரும் ஜிம் சென்று டயட் ஃபாலோ செய்து ஃபிட்னசுக்காக என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனையையும் செய்வார்கள். ஆனால் செம ஃபிட்டாக இருக்கும் ஒருவர் ஜிம் பக்கமே சென்றதில்லை என்றால் நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் இல்லையா? அப்படி ஜிம் பக்கம் தலையே வைத்து படுக்காத ஆனால் பார்க்க படு ஃபிட்டாக இருக்கும் ஒருவரின் டயட் பற்றித்தான் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
ரக்ஷிதா மகாலஷ்மி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தவர். தமிழில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர். அவர் முதன்முதலாக தமிழ் சீரியல் உலகில் நுழைந்தது ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலமாகத்தான். இவர் தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ எனும் சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். பள பள ஸ்கின், அடர்த்தியான கூந்தல், முகத்தில் தீராத புன்னகை, ஃபிட்டான உடல் என பார்க்கும் யாருக்கும் இவரை மிகப் பிடிக்கும். இப்படி எல்லாம் இருக்க காரணம் என்ன? என்னென்ன சீக்ரெட்களை வைத்துள்ளார்...? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ரக்ஷிதாவை பொறுத்தவரை உணவுக் கட்டுப்பாட்டோடு இருப்பவராம். அதனாலேயே எதை சாப்பிட்டாலும் பார்த்து பார்த்து சாப்பிடுவாராம். எண்ணெயில் வறுத்த உணவுகளுக்கு எப்போதும் ‘பிக் நோ’வாம். அதே போல சர்க்கரையை எல்லாம் எட்டிக்கூட பார்க்க மாட்டாராம். மேலும் ரவை, மைதா போன்ற பொருட்களையும் தவிர்த்து விடுவாராம். வெள்ளை சாதத்தையும் டயட் காரணமாக தவிர்த்து விட்டாராம். பிரியாணி சாப்பிட வேண்டும் என தோன்றினால் வாரத்தில் ஒரு நாள் ‘சீட்டிங் டே’ என போகாமல் சும்மா இரண்டே இரண்டு ஸ்பூன் மட்டும்தான் சாப்பிடுவாராம்.
பொதுவாக தான் சாப்பிடுவதற்கான உணவை தானே சமைப்பாராம். ஷீட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொள்ள மாட்டாராம். காலை உணவாக சத்துமாவு கஞ்சி எடுத்துக் கொள்வாராம். பிறகு ஒரு 11 மணிக்கு ப்ரன்ச்சாக இளநீர், பழ வகைகளை எடுத்துக் கொள்வாராம். வெள்ளை சாதம் சாப்பிடமாட்டேன் என ஏற்கனவே சொல்லிவிட்டார் இல்லையா? அதானால் மதிய உணவு ப்ரவுன் ரைஸ் எடுத்துக் கொள்வாராம். அதனுடன் வேக வைத்த வண்ண வண்ண காய்கறிகளை எடுத்துக் கொள்வாராம். அதிலும் குறிப்பாக கேரட், கீரை, பீட்ரூட் ஆகியவற்றை தினமும் எடுத்துக் கொள்வாராம். அவற்றை சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் மீண்டும் பசிக்க துவங்கியதும், ஊற வைத்த பயிறு வகைகள் தான் ஸ்னேக்சாம். அதனுடன் ஏதாவது ஒரு பழத்தை எடுத்துக் கொள்வாராம். குறிப்பாக மாதுளம் பழம் ரக்ஷிதாவின் ஃபேவரைட்டாம். அவர் தன்னுடைய இரவு சாப்பாட்டை 7 மணிக்கு முன்பாகவே முடித்துக் கொண்டு, மறுபடியும் பசித்தால் பார்லி, ஓட்ஸ், பன்னீர் போன்ற எதையாவது சாப்பிடுவாராம். பிறகு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக தூங்க சென்று விடுவாராம்.
எல்லாரும் அடிக்கடி சொல்கிற ‘நிறைய தண்ணி குடிக்கனும்’ ஐ காணோம் என்றுதானே தேடுகிறீர்கள்?.. ரக்ஷிதாவுக்கு தண்ணீர் குடிப்பதே பிடிக்காதாம். அப்படி மீறி நிறையக் குடித்தால் வாந்தி எடுத்துவிடுவாராம். அதானாலேயே குறைவாக நீர் அருந்துவாராம். மேலும், டீடாக்ஸ் நீரை குடிப்பாராம். அதுவும் சுடுதண்ணீரில் தேன், எலுமிச்சை கலந்து பாட்டிலில் நிரப்பி பக்கத்திலேயே வைத்துக் கொள்வாராம்.