ஃபுக்ரே படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் ரிச்சா சத்தா. இவர் அண்மையில் தனது ஃபிட்னஸ் பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். மெல்லிய கருப்பு உடை அணிந்து ஃபிட்டான தோற்றத்தில் அண்மையில் மீடியாவில் அவர் பகிர்ந்த புகைப்படம் அண்மையில் வைரலானது.
பிறகு அவரது இந்த திடீர் ஃபிட்னஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளிக்கையில் "நான் எனது உடலில் அமைப்பில் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் எனது தூக்கம், என் இயங்குதல், உடற்பயிற்சி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதன் காரணமாக தான் இந்த பிட்னஸைத் தொடங்கினேன்” என்றார்.
“அதிகமாக வேலை செய்ய நினைத்து, நினைத்து பாதிக்கப்பட்டவள்” எனத் தன்னை குறிப்பிட்ட ரிச்சா, "அதிகமான உடற்பயிற்சிகள் உங்கள் உட்புறத்தை சேதப்படுத்தும் மற்றும் உங்கள் முயற்சிக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஓய்வு என்பது மிகவும் முக்கியமானது ஆனால் அதைக் குறைத்து மதிப்பிட்டால் உடல் அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்" என்று கூறிய அவர் மேலும் தொடர்கையில், "உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைச் சமாளிக்க, நமது ஆரோக்கியத்திற்கான சில அடிப்படை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும், அதிக அழுத்த வேலை சூழல்களில் அதைப் புறந்தள்ள வேண்டும்." எனக் கூறுகிறார்.
கடந்த காலத்தில் தனது உடல் எடையை குறைக்குமாறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூறியது பற்றியும், தனது எடைக் குறைப்பு தனது கொள்கையுடன் முரண்படவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார். "நான் தற்போது 15-20 கிலோ வரைக் குறைத்துள்ளேன்.இது ஆரோக்கியமான வாழ்க்கைக்காகத்தான். சமூகத்தின் அழுத்தத்துக்காக அல்ல” என அவர் கூறினார்.